இலங்கை
சில்லறை இல்லையா – அக்கவுண்டில் போடு ; இணையதளத்தில் வைரலாகும் யாசகர் !

சில்லறை இல்லையா – அக்கவுண்டில் போடு ; இணையதளத்தில் வைரலாகும் யாசகர் !
தமிழகத்தின் திருப்பத்தூர் மாவட்டம் புத்துக்கோவில் பகுதியில் வாணியம்பாடி கணவாய்புதூர் பகுதியை சேர்ந்த 60 வயதான நபர் ஒருவர் ‘கியூ.ஆர்.’ கோடு அட்டையை கையில் வைத்துக்கொண்டு ‘டிஜிட்டல்’ முறையில் யாசகம் எடுத்து வரும் சம்பவம் இணையத்தில் வைரலாகியுள்ளது.
யாராவது சில்லறை இல்லை என்றால் “அக்கவுண்டில் போடு” என ‘கியூ.ஆர்.’ கோடு அட்டையை குறித்த யாசகர் காட்டுகிறார்.
இது தொடர்பில் பொதுமக்கள் சிலர் அந்த யாசகரிடம் வினவியபோது,
அதற்கு அவர், தற்போது செல்போன், கிரெடிட் கார்டு மற்றும் டெபிட் கார்டுகள் மூலம்தான் பெரும்பாலான பரிவர்த்தனைகள் நடைபெற்று வருகின்றன.
இப்போது பர்சில் பணம் வைத்துக்கொள்வது அரிதாக உள்ளதாக தெரிவித்த அவர், தான் 3 வங்கி ஏ.ரி.எம். கார்டுகள் வைத்து இருப்பதாக கூறியுள்ளாராம்.
‘கியூ.ஆர்.’ கோடு அட்டையை வைத்துக்கொண்டு ‘டிஜிட்டல்’ முறையில் பிச்சை எடுப்பதாகவும், இதனால் ‘டிஜிட்டல்’ முறையிலேயே பலர் பணம் செலுத்துவதாகவும் தெரிவித்துள்ளாராம்.
மாத சம்பளத்தில் வேலை செய்வோரே வாழ்க்கை செலவை சமாளிக்க படாதபாடுபட்டுவரும் நிலையில், 3 வங்கி ஏ.ரி.எம். கார்டுகள் வைத்து டிஜிட்டல்’ முறையில் யாசகம் பெறும் நபரின் செயல் இணையவாசிகளை வாய் பிள்ள வைத்துள்ளது.