இலங்கை
ஜனாதிபதி குறித்த அவதூறு கருத்து.. பகிரங்க மன்னிப்பு கோரிய முன்னாள் எம்பி

ஜனாதிபதி குறித்த அவதூறு கருத்து.. பகிரங்க மன்னிப்பு கோரிய முன்னாள் எம்பி
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தொடர்பில் அவதூறான கருத்தை வெளியிட்டமைக்காக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜானக திஸ்ஸ குட்டியாராச்சி நிபந்தனையற்ற மன்னிப்பு கோரியுள்ளார்.
ஜனாதிபதி தொடர்பில் தான் தெரிவித்த கருத்துக்கு நிபந்தனையின்றி வருத்தம் தெரிவிப்பதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ குட்டியாராச்சி இன்று கொழும்பு மாவட்ட நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
அநுரகுமார திஸாநாயக்க தாக்கல் செய்த வழக்கின் விசாரணையின் போது, அவதூறுக்கு 10 பில்லியன் ரூபாய் இழப்பீடு கோரி அவரது சட்டத்தரணிகள் மூலம் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டது.
இந்த வழக்கு இன்று கொழும்பு மாவட்ட நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
அதன்போது, நீதிமன்றில் திஸ்ஸ குட்டியாராச்சி முன்னிலையாகி மன்னிப்பு கோரிய நிலையில் இரு தரப்பினரும் வழக்கில் பரஸ்பர தீர்வை எட்டினர்.