Connect with us

இந்தியா

‘நமது படையிடம் ஆதாரம் உள்ளது’: பஹல்காம் தாக்குதல் பயங்கரவாதிகள் கொலை; உறுதி செய்த அமித்ஷா

Published

on

Amit Shah speaks in Lok Sabha

Loading

‘நமது படையிடம் ஆதாரம் உள்ளது’: பஹல்காம் தாக்குதல் பயங்கரவாதிகள் கொலை; உறுதி செய்த அமித்ஷா

பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாதிகளின் அடையாளம் குறித்து மத்திய அரசிடம் கேள்வி எழுப்பிய எதிர்க்கட்சிகளை, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மக்களவையில் கடுமையாக விமர்சித்தார்.  “நம்முடைய படையிடம் ஆதாரம் உள்ளது” என்று அவர் உறுதிபடத் தெரிவித்தார்.ஆங்கிலத்தில் படிக்க:மக்களவையில் செவ்வாய்க்கிழமை பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் மற்றும் ‘ஆபரேஷன் சிந்துர்’ குறித்த சிறப்பு விவாதத்தின் போது, மத்திய அரசின் சார்பில் முன்னின்று பேசிய உள்துறை அமைச்சர் அமித்ஷா, திங்கள்கிழமை ஸ்ரீநகர் புறநகரில் ‘ஆபரேஷன் மகாதேவ்’ கீழ் கொல்லப்பட்ட 3 பயங்கரவாதிகளும் ஏப்ரல் 22-ம் தேதி நடந்த பஹல்காம் பயங்கரவாத தாக்குதலை நடத்தியவர்கள் தான் என்று தெரிவித்தார்.டச்சிஹாம் வனப் பகுதியில் கொல்லப்பட்ட 3 பயங்கரவாதிகளையும் சுலைமான் என்ற ஃபைசல், ஆப்கான் மற்றும் ஜிப்ரான் என்று அடையாளம் கண்ட அமித்ஷா, அவர்கள் பாகிஸ்தானில் இருந்து வந்தவர்கள் என்றும் கூறினார்.“சுலைமான் ஒரு லஷ்கர்-இ-தொய்பா தளபதி, மேலும் இவர் ககங்கேர் தாக்குதலில் ஈடுபட்டவர். நம்முடைய படைகளிடம் அதற்கு ஆதாரம் உள்ளது. இந்த மூவரும் ஈடுபட்டனர். அவர்கள் மூவரும் கொல்லப்பட்டுள்ளனர். இந்த அவையின் மூலம் சம்பந்தப்பட்ட பாதுகாப்புப் படையினருக்கு நான் நன்றி கூறுகிறேன்” என்று அமித்ஷா தெரிவித்தார்.’பாகிஸ்தானைக் காப்பாற்றும் சதி அம்பலம்’பாகிஸ்தானைக் காப்பாற்றும் சதி அம்பலமானது:   “பயங்கரவாதிகள் எங்கிருந்து வந்தார்கள், எங்கு சென்றார்கள், யார் பொறுப்பு என்று எதிர்க்கட்சிகள் ஒரு நாள் முன்பு கேட்டன” என்று மத்திய உள்துறை அமைச்சர் காங்கிரஸ் தலைவர் ப. சிதம்பரத்தை மறைமுகமாகத் தாக்கிப் பேசினார். “நாங்கள் பொறுப்பு, ஏனென்றால் நாங்கள் ஆட்சியில் இருக்கிறோம்… முன்னாள் உள்துறை அமைச்சர் சிதம்பரம் பயங்கரவாதிகளின் அடையாளம் குறித்து – அவர்கள் எங்கிருந்து வந்தார்கள் என்று கேள்வி எழுப்பியது எனக்கு வருத்தமாக இருந்தது. அவர்கள் பாகிஸ்தானில் இருந்து வந்ததற்கான ஆதாரம் எங்களிடம் உள்ளது என்று நான் அவருக்குச் சொல்ல விரும்புகிறேன். எங்களிடம் வாக்காளர் அடையாள எண்களும் உள்ளன. இந்த துப்பாக்கிகளும் உள்ளன. அவர்களிடமிருந்து கண்டுபிடிக்கப்பட்ட சாக்லேட்டுகளும் பாகிஸ்தானில் தயாரிக்கப்பட்டவைதான்.” என்று கூறினார்.“அவர்கள் பாகிஸ்தானைச் சேர்ந்தவர்கள் இல்லை என்கிறார்கள். அதாவது ஒரு முன்னாள் உள்துறை அமைச்சர் பாகிஸ்தானுக்கு ஒரு க்ளீன் சிட் (குற்றமற்றவர்கள் என சான்று)கொடுக்கிறார்… இப்படிச் சொல்வதன் மூலம், சிதம்பரம் நாம் ஏன் பாகிஸ்தானைத் தாக்கினோம் என்று கேள்விகளை எழுப்புகிறார்… முன்னாள் உள்துறை அமைச்சர் ஆதாரம் கேட்கிறார். பாகிஸ்தானைக் காப்பாற்றும் இந்த சதி 130 கோடி இந்தியர்கள் முன் அம்பலமாகியுள்ளது” என்று அமித்ஷா கூறினார்.அகிலேஷ் யாதவை குறிப்பிட்டுப் பேசிய அமித்ஷா, கொல்லப்பட்ட பயங்கரவாதிகளின் மதம் தெரிந்த பிறகு சமாஜ்வாதி கட்சித் தலைவர் வருத்தப்பட வேண்டாம் என்று கூறினார்.’தோட்டாக்கள் 100% ஒத்துப்போகின்றன’ஏப்ரல் 22 பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு என்ன நடந்தது என்பது குறித்த விவரங்களையும் மத்திய அமைச்சர் வழங்கினார். “ராகுல் காந்தி மட்டுமே அங்கு சென்றதாக அவர்கள் கூறுகிறார்கள். பிற்பகல் 1 மணிக்கு தாக்குதல் நடந்தது, மாலை 5.30 மணிக்கு நான் அங்கு இருந்தேன். ஏப்ரல் 23-ம் தேதி ஒரு பாதுகாப்பு கூட்டம் நடந்தது… முதல் முடிவு என்னவென்றால், கொலையில் ஈடுபட்டவர்கள் பாகிஸ்தானுக்கு தப்பிச் செல்லக்கூடாது. அதற்கான ஏற்பாடுகளை நாங்கள் செய்தோம். மே 22-ம் தேதி, மனித புலனறிவு இருந்தது, பயங்கரவாதிகள் இருப்பு குறித்த தகவல் கிடைத்தது… ஜூலை 22-ம் தேதி எங்களுக்கு வெற்றி கிடைத்தது, இந்த பயங்கரவாதிகள் அங்கு இருந்தனர் என்பது உறுதிப்படுத்தப்பட்டது.” என்று கூறினார்.“நேற்றைய நடவடிக்கையில் நம்முடைய குடிமக்களைக் கொன்ற மூவரும் இறந்தனர்… இந்த பயங்கரவாதிகளுக்கு உதவியவர்களை என்.ஐ.ஏ (NIA) காவலில் வைத்திருந்தது. மேலும், பஹல்காமில் பயங்கரவாத தாக்குதலை நடத்தியவர்கள் இந்த மூவர் தான் என்பதை அவர்கள் உறுதிப்படுத்தினர். நாங்கள் இதை நம்பவில்லை. தாக்குதல் நடந்த இடத்தில் மீட்கப்பட்ட தோட்டாக்கள் பகுப்பாய்வு செய்யப்பட்டு, ஒரு பாலிஸ்டிக் அறிக்கை தயாரிக்கப்பட்டது. நேற்று மூன்று துப்பாக்கிகள் மீட்கப்பட்டன – ஒரு M9 அமெரிக்க துப்பாக்கி மற்றும் இரண்டு AK-47கள் மீட்கப்பட்டன. இந்த துப்பாக்கிகள் சண்டிகருக்கு அனுப்பப்பட்டன. மேலும், தோட்டாக்கள் ஒத்துப்போகின்றன. அதன் பிறகு, இந்த மூன்று துப்பாக்கிகள் நம்முடைய மக்களைக் கொல்ல பயன்படுத்தப்பட்டதா என்பது சரிபார்க்கப்பட்டது” என்று அமித்ஷா கூறினார்.ஆறு வல்லுநர்கள் தோட்டாக்கள் குறித்த பாலிஸ்டிக் அறிக்கையை சரிபார்த்துள்ளனர் என்று மூத்த பா.ஜ.க தலைவர் கூறினார்.  “மேலும் அவை 100 சதவீதம் ஒத்துப்போகின்றன என்று அவர்கள் கூறியுள்ளனர்.” என்றார். “ஆபரேஷன் சிந்துர் மூலம், இந்த பயங்கரவாதிகளின் பொறுப்பாளர்கள் கொல்லப்பட்டனர். அவர்களின் தலைவர்கள் எப்படி கொல்லப்பட்டார்கள் என்று நான் உங்களுக்குச் சொல்வேன். இந்தத் தகவல் பகிரப்படும்போது, எல்லோருக்கும் மகிழ்ச்சி உண்டாகும் என்று நான் நம்பினேன். பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதில் உங்களுக்கு மகிழ்ச்சி இல்லையா?” என்று அமித்ஷா கேள்வி எழுப்பினார்.“நான் குடும்பங்களை சந்திக்க அங்கு சென்றேன்… ஆபரேஷன் சிந்துர் மூலம் பயங்கரவாதிகளை அனுப்பியவர்கள் அனைவரும் கொல்லப்பட்டுள்ளனர். மேலும், இங்கு வந்தவர்களும் கொல்லப்பட்டுள்ளனர் என்பதை நான் அவர்களுக்குச் சொல்ல விரும்புகிறேன்” என்று அமித்ஷா கூறினார்.இந்திய ராணுவம், மத்திய ரிசர்வ் போலீஸ் படை (CRPF) மற்றும் ஜம்மு – காஷ்மீர் காவல்துறை “அவர்கள் தப்பிச் செல்வதைத் தடுக்க ஏற்பாடுகளைச் செய்தனர்” என்று அமித்ஷா தெரிவித்தார். “மே 22-ம் தேதி, பயங்கரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுத்த பஷீர் மற்றும் பர்வேஸ் ஆகியோர் கைது செய்யப்பட்டு காவலில் வைக்கப்பட்டனர். ஏப்ரல் 21-ம் தேதி 3 பயங்கரவாதிகள் வந்திருந்தனர்… அவர்களிடம் துப்பாக்கிகள் இருந்தன… அவர்கள் சாப்பிட்டு, தேநீர் அருந்தி, சில உணவுப் பொருட்களையும் தங்களுடன் எடுத்துச் சென்றனர்… மீட்கப்பட்ட தோட்டாக்கள் சண்டிகர் எஃப்.எஸ்.எல்-க்கு அனுப்பப்பட்டன… பயங்கரவாதிகள் அடையாளம் காணப்பட்டனர்… பாகிஸ்தானில் இருந்து 3 பயங்கரவாதிகள் அங்கு இருந்தனர்” என்றார்.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன