சினிமா
‘மதராஸி’ படத்தில் ‘சலம்பலா’ பாடல் புரொமோ வெளியீடு!ரசிகர்கள் மத்தியில் வைரலாகும் வீடியோ…!

‘மதராஸி’ படத்தில் ‘சலம்பலா’ பாடல் புரொமோ வெளியீடு!ரசிகர்கள் மத்தியில் வைரலாகும் வீடியோ…!
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான சிவகார்த்திகேயன் தனது 23-வது படமான ‘மதராஸி’ யில், முதன்முறையாக பிரபல இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் உடன் இணைய உள்ளார். மாஸ் மற்றும் ஆக்ஷன் கலந்த இந்த திரைப்படம் ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.படத்தில் சிவகார்த்திகேயனுடன் ருக்மணி வசந்த், விக்ராந்த், வித்யூத் ஜம்வால், பிஜு மேனன் மற்றும் ‘டான்சிங் ரோஸ்’ சபீர் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்தை ஸ்ரீ லட்சுமி மூவிஸ் நிறுவனம் தயாரிக்க, இசையமைப்பை அனிருத் ரவிச்சந்தர் மேற்கொண்டு வருகிறார். ‘டாக்டர்’, ‘டான்’ ஆகிய வெற்றி படங்களுக்கு பிறகு, அனிருத் – சிவகார்த்திகேயன் ஜோடி மீண்டும் இணையவிருப்பது ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை கூட்டியுள்ளது.இந்த நிலையில், ‘மதராசி’ படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் புரொமோ “சலம்பலா” இன்று அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது. முழு நீள பாடல் வீடியோ வரும் ஜூலை 31ம் தேதி வெளியாகவுள்ளது. இந்த மாஸ் பாடல், சமூக வலைத்தளங்களில் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.