சினிமா
மன நிம்மதிக்காக ரச்சிதா எங்க போயிருக்காங்கன்னு தெரியுமா? இன்ஸ்டாவில் லீக்கான வீடியோ.!

மன நிம்மதிக்காக ரச்சிதா எங்க போயிருக்காங்கன்னு தெரியுமா? இன்ஸ்டாவில் லீக்கான வீடியோ.!
சின்னத்திரையின் பிரபலமான நடிகை ரச்சிதா மஹாலட்சுமி, சமீபத்தில் கடற்கரையில் நேரத்தை செலவழிக்கும் ஜாலியான வீடியோவைப் பகிர்ந்துள்ளார். அந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி, ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.ரச்சிதா மஹாலட்சுமி, தமிழ் தொலைக்காட்சி ரசிகர்களுக்கு மிகவும் பரிச்சயமான முகம். “சரவணன் மீனாட்சி” போன்ற பல பிரபல சீரியல்களில் நாயகியாக நடித்ததன் மூலம், இவர் தொலைக்காட்சியில் ஒரு நம்பகமான முகமாக மாறினார்.பிக்பாஸ் சீசன் 6-ல் கலந்து கொண்டு, ரச்சிதா தனது நேர்மை, பேச்சு ஆகியவற்றின் மூலம் புதிய ரசிகர்களை உருவாக்கினார். அதன்பிறகு, நிகழ்ச்சிகள், பேட்டிகள் என்பவற்றில் கலந்து கொண்டு மக்கள் மனதை வென்றார். அத்தகைய நடிகையின் இந்த வீடியோ தற்பொழுது இன்ஸ்டாகிராமில் வைரலாகி அதிகளவான லைக்கினைப் பெற்றுள்ளது.