வணிகம்
மூத்த குடிமக்களுக்கான எஃப்.டி திட்டங்கள்; 3 ஆண்டுகளுக்கு 8.5% வரை வட்டி: இந்த வங்கிகளை நோட் பண்ணுங்க மக்களே

மூத்த குடிமக்களுக்கான எஃப்.டி திட்டங்கள்; 3 ஆண்டுகளுக்கு 8.5% வரை வட்டி: இந்த வங்கிகளை நோட் பண்ணுங்க மக்களே
மூத்த குடிமக்களுக்கு ஃபிக்சட் டெபாசிட்கள் எப்போதும் பாதுகாப்பான மற்றும் உறுதியான வருமானத்தை அளிக்கும் ஒரு முதலீட்டு தேர்வாக இருந்து வருகிறது. இந்திய ரிசர்வ் வங்கியின் கொள்கைகள் மற்றும் சந்தை நிலவரங்களுக்கு ஏற்ப வட்டி விகிதங்கள் மாறுபடும் நிலையில், பல வங்கிகள் மூத்த குடிமக்களுக்கு அதிகமான வட்டி விகிதங்களை வழங்குகின்றன. அந்த வகையில் அதிக வட்டி விகிதங்களை வழங்கும் வங்கிகளின் பட்டியலை இந்தக் குறிப்பில் பார்க்கலாம்.உத்கர்ஷ் ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கியில், மூத்த குடிமக்களுக்கு மூன்று வருட எஃப்.டி-களுக்கு 8.5 சதவீதம் வட்டி வழங்கப்படுகிறது. சிறு நிதி வங்கிகளில் இதுவே அதிக வட்டி விகிதமாகும். ஜனா ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கியில் மூன்று வருட எஃப்.டி-களுக்கு 8.25 சதவீதம் வட்டி வழங்கப்படுகிறது.சூர்யோதய் ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கி, மூன்று வருட எஃப்.டி-களுக்கு 8.15 சதவீதம் வட்டி வழங்குகிறது. யெஸ் வங்கியில் இருந்து மூத்த குடிமக்களுக்கு மூன்று வருட எஃப்.டி-களுக்கு 7.85 சதவீதம் வட்டி வழங்கப்படுகிறது. பந்தன் வங்கி, ஈக்விடாஸ் ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கி மற்றும் யூனிட்டி ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கி ஆகியவை மூத்த குடிமக்களுக்கு மூன்று வருட எஃப்.டி-களுக்கு 7.75 சதவீதம் வட்டி வழங்குகின்றன.உஜ்ஜிவன் ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கி மற்றும் ஆர்.பி.எல். வங்கி ஆகிய இரு வங்கிகளும் 7.70 சதவீதம் வட்டியை மூன்று வருட எஃப்.டி-களுக்கு வழங்குகின்றன. இது தவிர ஏ.யு. ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கியில் 7.6 சதவீதம் வழங்கப்படுகிறது. எஸ்.பி.எம் வங்கி, 7.55 சதவீதம் வட்டி வழங்குகிறது. இண்டஸ்இண்ட் வங்கியில் 7.50 சதவீதம் வட்டி வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது. டி.சி.பி. வங்கி, ஐ.டி.எஃப்.சி ஃப்ர்ஸ்ட் வங்கி மற்றும் ஜம்மு & காஷ்மீர் வங்கி ஆகியவற்றில் மூத்த குடிமக்களுக்கு மூன்று வருட எஃப்.டி-களுக்கு 7.25 சதவீதம் வட்டி வழங்கப்படுகிறது. இந்திய ரிசர்வ் வங்கியின் துணை நிறுவனமான டெபாசிட் இன்சூரன்ஸ் அண்ட் கிரெடிட் கேரண்டி கார்ப்பரேஷன் (DICGC), நிலையான வைப்பு நிதிகளுக்கு ரூ. 5 லட்சம் வரை பாதுகாப்புக்கு உத்தரவாதம் அளிக்கிறது.எனவே, முதலீடு செய்வதற்கு முன்பாக உங்களுடைய நிதி தேவையை அறிந்து சரியான வங்கியை தேர்வு செய்ய வேண்டும் என்று வல்லுநர்கள் அறிவுறுத்துகின்றனர்.