இலங்கை
யட்டிநுவர பிரதேச சபை எதிர்க்கட்சித் தலைவர் குடும்பத்துடன் உயிர்மாய்ப்பு!

யட்டிநுவர பிரதேச சபை எதிர்க்கட்சித் தலைவர் குடும்பத்துடன் உயிர்மாய்ப்பு!
யட்டிநுவர பிரதேச சபையின் எதிர்க்கட்சித் தலைவர் தனது குடும்பத்துடன் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துள்ளார்.
உயிரிழந்தவர்களில் யடிநுவர பிரதேச சபையின் எதிர்க்கட்சித் தலைவர் வயது 52, அவரது மனைவி வயது 44 மற்றும் அவர்களது மகள் வயது 17 என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
யடிநுவர பிரதேச சபையின் எதிர்க்கட்சித் தலைவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட நிலையிலும், அவரது மனைவி மற்றும் மகளின் சடலங்கள் வீட்டின் அறைகளில் இருந்தும் கண்டுபிடிக்கப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
சம்பவம் குறித்து பேராதனை காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
இந்த நிலையில், SOCO அதிகாரிகள் இப்போது சம்பவ இடத்திற்கு வந்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இதேவேளை இவ்வாறு உயிரிழந்த குழந்தை ஒரு பெண் குழந்தை என்று காவல்துறையினர் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.