இலங்கை
யாழில் நிரந்த உத்தியோகத்தர்கள் இல்லாமல் இயங்கும் பிரதேச செயலகங்கள்

யாழில் நிரந்த உத்தியோகத்தர்கள் இல்லாமல் இயங்கும் பிரதேச செயலகங்கள்
யாழ்ப்பாண மாவட்டத்திலுள்ள 15 பிரதேச செயலகங்களில் 9 பிரதேச செயலகங்களில் மட்டும் நிரந்தர நிர்வாக உத்தியோகத்தர்கள் பணியாற்றுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில், ஏனைய 6 பிரதேச செயலகங்களிலும் நிரந்த உத்தியோகத்தர்கள் இன்றி பதில் கடமை உத்தியோகத்தர்களே கடமையில் உள்ளமை தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள பிரதேச செயலகங்களான யாழ்ப்பாணம், நல்லூர், சங்கானை, உடுவில், சாவகச்சேரி, கரவெட்டி, பருத்தித்துறை மற்றும் மருதங்கேணி ஆகியவற்றில் கடமையிலுள்ள நிர்வாக உத்தியோகத்தர்கள் அநேகமாக 2021 ஆம் ஆண்டு பொறுப்பேற்றவர்களாக உள்ளனர்.
இந்த நிலையில், கோப்பாய் பிரதேச செயலகத்தில் கடமையாற்றும் நிர்வாக உத்தியோகத்தர் மட்டும் 2011 இருந்து இன்று வரை இடமாற்றம் ஏதும் இன்றி கோப்பாய் பிரதேச செயலகத்தில் 14 வருடங்களாகத் தொடர்ந்து கடமையில் உள்ளார்.
ஏனைய பிரதேச செயலகங்களான வேலனை, நெடுந்தீவு, ஊர்காவற்துறை, காரைநகர், தெல்லிப்பழை மற்றும் சண்டிலிப்பாய் ஆகிய பிரதேச செயலகங்களில் நிர்வாக உத்தியோகத்தர்கள் நிரந்தரமாக நியமிக்கப்படவில்லை என்பது தெரியவந்துள்ளது.