Connect with us

பொழுதுபோக்கு

விஜய் மறுத்த பாட்டு; அந்த பாட்டுக்காக தனது படத்தில் ஒரு சீன் வைத்த சசிகுமார்: இந்த பாடல் பெரிய ஹிட்டாச்சே!

Published

on

sasikum.jpg

Loading

விஜய் மறுத்த பாட்டு; அந்த பாட்டுக்காக தனது படத்தில் ஒரு சீன் வைத்த சசிகுமார்: இந்த பாடல் பெரிய ஹிட்டாச்சே!

விஜய்க்காக எழுதி பின்னர் நிராகரிக்கப்பட்டு சூப்ப்ர் ஹிட் அடித்த ஒரு பாடலை பற்றி நடிகர் சசிகுமார் சுவாரசியமான தகவல் ஒன்றை பகிர்ந்துள்ளார். பிளாக்‌ஷீப் சினிமாஸ் யூடியூப் பக்கத்தில் ‘டூரிஸ்ட் ஃபேமலி’ திரைப்படம் குறித்த நிகழ்ச்சியின்போது நடிகர் சசிகுமார் சுவாரஸ்யமான ஒரு தகவலைப் பகிர்ந்துகொண்டார்.”ஜில்லா விட்டு ஜில்லா” என்ற சூப்பர் ஹிட் பாடல் முதலில் விஜய்க்காக எழுதப்பட்டு நிராகரிக்கப்பட்டதாகவும், பின்னர் ‘ஈசன்’ திரைப்படத்தில் வெளியாகி பெரும் வெற்றி பெற்றதாகவும் அவர் கூறினார். ஜில்லா விட்டு ஜில்லா பாடல் 2010 ஆம் ஆண்டு வெளிவந்த சசிகுமாரின் ‘ஈசன்’ திரைப்படத்தில் இடம்பெற்று பெரும் வரவேற்பைப் பெற்றது. இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் இசையமைத்தார். மேலும் இந்த பாடல் மோகன்ராஜ் முதன் முதலில் எழுதிய பாடல் ஆகும்.சசிகுமார் குறிப்பிட்டபடி, இந்தப் பாடல் ஆரம்பத்தில் இயக்குநர் சசி இயக்கிய ‘ஈசன்’ படத்திற்காக எழுதப்படவில்லை. மாறாக, அது நடிகர் விஜய்க்காக எழுதப்பட்டது. ஆனால் சில காரணங்களால் அந்தப் பாடல் நிராகரிக்கப்பட்டது. ஒரு வருடம் கழித்து, இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன், சசிகுமாரை அழைத்து, இந்தப் பாடல் தனக்குப் பிடித்திருப்பதாகவும், அதை ‘ஈசன்’ திரைப்படத்தில் பயன்படுத்த விரும்புவதாகவும் தெரிவித்தார்.பின்னர், ஒரு திரைப்பட விருது விழாவிற்காக ஹைதராபாத் செல்லும் விமானத்தில் இருந்தபோது, ஒருவருக்கு இந்தப் பாடல் மிகவும் பிடித்துப்போக, அதைத் தங்கள் திரைப்படத்தில் பயன்படுத்த முடிவு செய்துள்ளனர். ஏற்கெனவே திரைப்படத்தின் கதை முடிவடைந்திருந்தாலும், இந்தப் பாடலை இழக்க விரும்பாததால், அதற்கென ஒரு காட்சியை உருவாக்கி, அதை படத்தில் சேர்த்ததாகவும் சசிகுமார் விவரித்தார். இப்படியாக, விஜய்க்கு நிராகரிக்கப்பட்ட ஒரு பாடல், ‘ஈசன்’ படத்தில் இடம்பெற்று சூப்பர் ஹிட் பாடலாக மாறியது.இப்படி, நிராகரிக்கப்பட்ட ஒரு பாடல், சரியான நேரத்தில், சரியான திரைப்படத்தில் வெளியாகி, பட்டிதொட்டியெங்கும் ஒலித்து, இன்று வரை பலரது விருப்பமான பாடல்களில் ஒன்றாக “ஜில்லா விட்டு ஜில்லா” வலம் வருகிறது.ஜில்லா விட்டு ஜில்லா Song Reject ஆனது  😲 Tourist family movie is running successfully and stealing hearts worldwide! 🎬…

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன