சினிமா
வெளியானது “அவதார்: ஃபயர் அண்ட் ஆஷ்” படத்தின் ட்ரெய்லர்..! வைரலான வீடியோ இதோ.!

வெளியானது “அவதார்: ஃபயர் அண்ட் ஆஷ்” படத்தின் ட்ரெய்லர்..! வைரலான வீடியோ இதோ.!
வசூலை அள்ளிக் குவித்த ‘அவதார்’ தொடரின் மூன்றாவது பாகம் வருகின்ற டிசம்பரில் வெளியாக உள்ளது. ‘அவதார்: ஃபயர் அண்ட் ஆஷ்’ எனும் தலைப்பில் உருவாகியிருக்கும் இந்த திரைப்படத்தின் ட்ரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது. இந்த வீடியோ ரசிகர்கள் மற்றும் சினிமா விமர்சகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.‘அவதார்’ படத் தொடர் உலக சினிமாவின் முக்கிய சாதனைகளில் ஒன்றாக பார்க்கப்படுகிறது. முதல் பாகம், ஜெயம்ஸ் கேமரூன் இயக்கத்தில், உலகளாவிய வசூலில் புதிய சாதனை படைத்தது. 2022-ல் வெளியான இரண்டாவது பாகமான ‘Avatar: The Way of Water’ மீண்டும் அந்த சாதனையைத் தொடர்ந்தது. இப்போது, ரசிகர்களுக்காக வருகிற டிசம்பர் மாதம் வெளியாகும் மூன்றாவது பாகம் ‘Avatar: Fire and Ash’ புதிய வரலாற்றை எழுதவிருக்கிறது.Avatar 3: Fire and Ash எனப்படும் இந்த மூன்றாவது பாகமும் இயக்குநர் ஜெயம்ஸ் கேமரூன் தலைமையிலான அதே குழுவால் உருவாகி வருகிறது. மூன்றாவது பாகத்தின் படப்பிடிப்பு இரண்டாம் பாகத்துடன் சேர்த்து மேற்கொள்ளப்பட்டது. இது ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.