இலங்கை
இனி எம்.பிக்களுக்கு ஓய்வூதியம் இல்லை!

இனி எம்.பிக்களுக்கு ஓய்வூதியம் இல்லை!
நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதியத்தை இரத்துச் செய்வதற்கான மசோதா அடுத்த வாரம் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படும் என்று பொது பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற விவகார அமைச்சு அறிவித்துள்ளது.
நீதி அமைச்சினால் வரைவு செய்யப்பட்ட இந்த மசோதா, மறுஆய்வுக்காக சட்டமா அதிபருக்கு அனுப்பப்பட்டுள்ளது.
இந்த நடவடிக்கை தற்போதைய அரசாங்கத்தால் வழங்கப்பட்ட தேர்தல் வாக்குறுதியின்படி உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
இதேவேளை நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வாகன அனுமதி வழங்குவது ஏற்கனவே இடைநிறுத்தப்பட்டுள்ளதாக அமைச்சு தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.