இலங்கை
இலங்கையின் பிரபல யூடியூபருக்கு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

இலங்கையின் பிரபல யூடியூபருக்கு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு
முன்னாள் அமைச்சர் மனுஷ நாணயக்கார தாக்கல் செய்த வழக்கைத் தொடர்ந்து, யூடியூபர் சுதத்த திலக்சிறிக்கு எதிராக கொழும்பு மாவட்ட நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.
கொழும்பு மாவட்ட 01 ஆம் இலக்க நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட சமர்ப்பிப்புகளை பரிசீலித்த பின்னர், கொழும்பு மாவட்ட நீதிமன்ற நீதிபதி இன்று (30) இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.
சட்டத்தரணி சனத் விஜேவர்தனவின் அறிவுறுத்தலின் பேரில், மனுஷ நாணயக்கார சார்பாக ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி இந்த வழக்கில் ஆஜரானார்.
இந்தத் தடை உத்தரவு திலக்சிறி நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ நாணயக்காரவுக்கு எதிராக எந்தவொரு அவதூறான அறிக்கைகளை வெளியிடுவதிலிருந்தோ அல்லது ஈடுபடுவதிலிருந்தோ தடுப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
இதேவேளை குறித்த வழக்கு ஒகஸ்ட் 07 ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும்.