இலங்கை
இலத்திரனியல் கடவுச்சீட்டுக்களை அச்சிடுதல்! விடுக்கப்பட்ட அழைப்பு

இலத்திரனியல் கடவுச்சீட்டுக்களை அச்சிடுதல்! விடுக்கப்பட்ட அழைப்பு
இலத்திரனியல் கடவுச்சீட்டுக்களை அச்சிடுவதற்கான விலைமனுக்களைப் பெற்றுக்கொள்வதற்கு குடிவரவு மற்றும் குடியகல்வுத்திணைக்களம் அழைப்பு விடுத்துள்ளது.
இந்த விலைமனுக்கோரலுக்கான அழைப்பு 7 ஆம் திகதி வரை மேற்கொள்ளப்படும் என்று குடிவரவு மற்றும் குடியகல்வுத்திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதற்கிடையில், ஒரு நாள் சேவையின் கீழ் விண்ணப்பிக்கப்பட்ட கடவுச்சீட்டுக்கள் தாமதமின்றி வழங்கப்பட்டு வருவதாகவும் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதேவேளை தினமும் சுமார் 3,150 கடவுச்சீட்டுக்கள் வழங்கப்படுவதாகவும் கடவுச்சீட்டுக்களுக்கான விண்ணப்பங்கள் காலை 6:30 மணி முதல் பிற்பகல் 2:00 மணி வரை ஏற்றுக்கொள்ளப்படும் என்று கூறப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
லங்கா4 (Lanka4)
அனுசரணை