பொழுதுபோக்கு
என்ன ஈவ்டீசிங் பண்றீங்க, இதுதான் கலாச்சாரமா? சசிகுமாரை வறுத்தெடுத்த சென்சார் போர்டு: இந்த ஹிட் படத்துக்கு வந்த சோதனை!

என்ன ஈவ்டீசிங் பண்றீங்க, இதுதான் கலாச்சாரமா? சசிகுமாரை வறுத்தெடுத்த சென்சார் போர்டு: இந்த ஹிட் படத்துக்கு வந்த சோதனை!
சுந்தரபாண்டியன் திரைப்படத்தில் இடம்பெற்ற சில காட்சிகளுக்கு சென்சார் போர்டு தரப்பில் இருந்து ஆட்சேபனை தெரிவிக்கப்பட்டதாக அப்படத்தின் தயாரிப்பாளரும், கதாநாயகனுமான சசிகுமார் தெரிவித்துள்ளார். பிகைண்ட்வுட்ஸ் யூடியூப் சேனலுக்கு அளித்த நேர்காணலில், இதனை அவர் குறிப்பிட்டுள்ளார்.தமிழ் சினிமாவில் தயாரிப்பாளர், இயக்குநர், நடிகர் என்று பன்முகங்களை கொண்டவராக சசிகுமார் விளங்குகிறார். குறிப்பாக, இவரது முதல் திரைப்படமான சுப்பிரமணியபுரம், ஒரு கல்ட் கிளாஸிக் என்று ரசிகர்களால் போற்றப்படுகிறது. இதைத் தொடர்ந்து, நாடோடிகள், குட்டிப்புலி போன்ற பல படங்களில் கதாநாயகனாக சசிகுமார் நடித்தார். இப்படங்கள் வர்த்தக ரீதியாக வெற்றி பெற்றன.இவரது நடிப்பில் அண்மையில் வெளியான டூரிஸ்ட் ஃபேமிலி திரைப்படம், விமர்சகர்கள் மற்றும் ரசிகர்களின் வரவேற்பை பெற்றது. மேலும், தயாரிப்பாளர், விநியோகஸ்தர்கள், திரையரங்க உரிமையாளர்கள் ஆகியோருக்கு நல்ல லாபத்தை கொடுத்தது என்றும் தெரிவித்துள்ளனர். முன்னதாக, சசிகுமாருக்கு கதாநாயகனாக நல்ல வரவேற்பை பெற்றுக் கொடுத்த திரைப்படமாக சுந்தரபாண்டியன் அமைந்தது. இப்படத்தின் பாடல்கள், காமெடி காட்சிகள் வரை அனைத்தும் ஹிட்டானது. இப்படத்தில் வில்லனாக விஜய் சேதுபதி நடித்தார். இந்நிலையில், இப்படத்தில் இடம்பெற்ற சில காட்சிகளுக்கு, சென்சார் போர்டு தரப்பில் இருந்து எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டதாக சசிகுமார் தெரிவித்துள்ளார். குறிப்பாக, சென்சார் போர்டில் இருந்த ஒரு பெண் அதிகாரி, கடும் ஆட்சேபனை கூறியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.அதன்படி, “சுந்தரபாண்டியன் திரைப்படத்தில் அத்தை மகளை கிண்டல் செய்வது போன்ற காட்சி இடம்பெற்றிருக்கும். இந்தக் காட்சிக்கு சென்சார் போர்டில் இருந்த ஒரு பெண் எதிர்ப்பு தெரிவித்தார். குறிப்பாக, ஈவ்டீசிங் செய்வதை போன்று அந்தக் காட்சி இருக்கிறது என்று அவர் கூறினார். ஆனால், இதனை எங்களது கலாசாரம் என்று கூறினோம். இதை ஏற்க மறுத்த அப்பெண், கேலி செய்வதை எப்படி கலாசாரம் என்று கூறுவீர்கள்? என்று கேட்டார். அப்படத்திற்கு நான் தயாரிப்பாளர் என்ற அடிப்படையில், சம்பந்தப்பட்ட அதிகாரியுடன் பேசினேன். குறிப்பாக, ஆண் மற்றும் பெண் என இருவருமே உறவுமுறைகளில் இவ்வாறு கேலி பேசுவார்கள் என்று அந்த அதிகாரிக்கும் எடுத்துக் கூறினேன்” என சசிகுமார் தெரிவித்துள்ளார்.