பொழுதுபோக்கு
கமல், ரஜினி, அர்ஜுன்… எல்.சி.யூ-க்கு முன்பே யுனிவர்ஸ் யோசித்த ஷங்கர்; கடைசில இப்படி ஆகிடுச்சே!

கமல், ரஜினி, அர்ஜுன்… எல்.சி.யூ-க்கு முன்பே யுனிவர்ஸ் யோசித்த ஷங்கர்; கடைசில இப்படி ஆகிடுச்சே!
தற்போது சினிமா உலகில் பெரிதும் பேசப்படும் LCU (லோகேஷ் சினிமாடிக் யுனிவர்ஸ்) போன்ற ஒரு பிரம்மாண்டமான யுனிவர்ஸை உருவாக்கும் யோசனை இயக்குனர் ஷங்கருக்குப் பல வருடங்களுக்கு முன்பே இருந்திருக்கிறது. இதனை ஒரு பேட்டியில் அவர் கூறியுள்ளார். பொதுவாகவே ஷங்கர் படங்களின் தனிச்சிறப்பு அதன் சமூகச் செய்திகள், பிரம்மாண்டமான செட்கள், பாடல்களில் புதுமையான காட்சி அமைப்புகள் மற்றும் சிறந்த தொழில்நுட்பப் பயன்பாடு ஆகியவை ரசிகர்களுக்கு மிகவும் பிடிக்கும். இந்நிலையில் அவர் சங்கர் யுனிவர்ஸ் உருவாக்க நினைத்தது குறித்து கூறியுள்ளார். ஷங்கர் தனது தயாரிப்பு மற்றும் தொழில்நுட்பக் குழுவினரிடம் ஒருமுறை ஒரு யோசனையை முன்வைத்துள்ளார். அது, அவரது படங்களில் மிகவும் பிரபலமான கதாபாத்திரங்களான இந்தியன் தாத்தா (இந்தியன்), சிவாஜி (சிவாஜி: தி பாஸ்), மற்றும் முதல்வன் புகழேந்தி (முதல்வன்) ஆகிய மூவரும் ஒரு பொதுவான குறிக்கோளுக்காக ஒரே படத்தில் இணைந்து சண்டையிடுவது என்பதே அந்த யோசனை. இது ஒரு மிகப்பெரிய கிராஸ்ஓவர் படமாக இருந்திருக்கும்.ஆனால், ஷங்கரின் இந்த முன்மொழிதலை அவரது குழுவினர் யாரும் தீவிரமாக எடுத்துக் கொள்ளவில்லை. குறிப்பாக, தொழில்நுட்பக் கலைஞர்கள் கூட ஒரு புன்னகையுடன் நகர்ந்து சென்றதால், அந்த யோசனையை அவர் அப்படியே விட்டுவிட்டார். எந்த உற்சாகமும் இல்லாததால், ஷங்கர் தனது யோசனை ஒரு “ஒர்க் அவுட் ஆகாத ஐடியா” என்று நினைத்து கைவிட்டுவிட்டதாகக் கூறியுள்ளார்.https://www.facebook.com/reel/1056069069837708ஆனால், சில வருடங்கள் கழித்து, முதல் அவெஞ்சர்ஸ் திரைப்படம் வெளியானபோதுதான், ஷங்கருக்குப் பெரும் வருத்தம் ஏற்பட்டுள்ளது. தான் கண்ட கனவை அன்றே நனவாக்கி இருக்க வேண்டுமே என்று அவர் எண்ணியிருக்கிறார். இந்த அனுபவம் அவருக்கு ஒரு முக்கியமான பாடத்தைக் கற்றுக் கொடுத்துள்ளது: “நாளைக்கு ஏதாவது ஒரு ஐடியா தோணுச்சுன்னா யோசிக்காத, பண்ணிடு. இல்லாட்டி உலகத்துல எல்லாருக்கும் அந்த யோசனை வரும்.” என்று தனது அனுபவத்தைப் பகிர்ந்து கொண்டார். ஷங்கரின் இந்த யோசனை அன்றே நிறைவேறியிருந்தால், தமிழ் சினிமா உலகில் ஒரு முன்னோடி யுனிவர்ஸ் பல வருடங்களுக்கு முன்பே உருவாகியிருக்கும்.