சினிமா
கறுப்பு பாவாடை தாவணியில் மின்னும் துஷாரா…!வைரலாகும் வீடியோ….!

கறுப்பு பாவாடை தாவணியில் மின்னும் துஷாரா…!வைரலாகும் வீடியோ….!
தமிழ் சினிமாவில் புதுமுகமாக அறிமுகமாகி, தன்னுடைய தனித்துவமான நடிப்பால் ரசிகர்களின் மனங்களை கவர்ந்த நடிகை துஷாரா விஜயன், தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகின்ற வீடியோவால் மீண்டும் அனைவரின் கவனத்தையும் பெற்றுள்ளார்.‘சார்பட்டா பரம்பரை’ படத்தில் கதாநாயகியாக அறிமுகமான துஷாரா, அதனைத் தொடர்ந்து தனுஷ் இயக்கிய ராயன் படத்தில் அவரின் தங்கையாக நடித்தார். இந்த படங்கள் மூலமாகவே இளம் ரசிகர்களிடையே ஒரு தனி இடத்தை பெற்றார். தனது சிறந்த நடிப்புத் திறமையால் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள வேட்டையன் படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.அதனைத் தொடர்ந்து விக்ரம் நடிப்பில் உருவாகியுள்ள வீர தீர சூரன் படத்தில் கதாநாயகியாக நடித்ததன் மூலம் தனது திரைப்பயணத்தை வலுப்படுத்தியுள்ளார்.இந்நிலையில், துஷாரா விஜயன் அண்மையில் தனது சமூக வலைத்தள பக்கத்தில் ஹோம்லி லுக்கில் ஒரு அழகிய வீடியோவை பகிர்ந்துள்ளார். கறுப்பு நிற பாவாடை தாவணியில் பாரம்பரிய உடையில் நடனம் ஆடுகிறார். இவரது இயற்கையான அழகும், பாரம்பரிய அணிகலன்களும் காணும் அனைவரையும் கவர்ந்துள்ளன. இந்த வீடியோ தற்போது ரசிகர்கள் மத்தியில் வேகமாக பரவி வருகிறது.