உலகம்
காசாவில் இஸ்ரேலின் இராணுவ தாக்குதலால் ஏறக்குறைய 60000 பேர் பலி!

காசாவில் இஸ்ரேலின் இராணுவ தாக்குதலால் ஏறக்குறைய 60000 பேர் பலி!
அக்டோபர் 7, 2023 முதல் காசா பகுதியில் இஸ்ரேல் நடத்திய இராணுவத் தாக்குதலில் குறைந்தது 60,000 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளதாக, அந்த பகுதியின் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்த மோதல் கடலோரப் பகுதியை பேரழிவிற்கு உட்படுத்தி மனிதாபிமான நெருக்கடியைத் தூண்டியுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
கொல்லப்பட்ட பாலஸ்தீனியர்களில் பெரும்பாலோர் பொதுமக்கள் என்று அந்த பகுதியின் சுகாதார அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
அதேவேளை காயமடைந்தவர்களின் எண்ணிக்கை 145,870 என்றும், ஆயிரக்கணக்கானோர் அழிக்கப்பட்ட கட்டிடங்கள் மற்றும் பகுதிகளின் இடிபாடுகளுக்கு அடியில் காணாமல் போயுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
லங்கா4 (Lanka4)
அனுசரணை