சினிமா
காசு சீக்கிரம் சம்பாதிக்கணும்னு தான் இந்த தொழிலில் இறங்கினேன்!! சீரியல் நடிகை ரிஹானா ஓபன் டாக்..

காசு சீக்கிரம் சம்பாதிக்கணும்னு தான் இந்த தொழிலில் இறங்கினேன்!! சீரியல் நடிகை ரிஹானா ஓபன் டாக்..
பாண்டியன் ஸ்டோர்ஸ், பொன்னி உள்ளிட்ட சீரியல்களில் நடித்து பிரபலமானவர் நடிகை ரிஹானா பேகம், தன்னை ஏமாற்றி திருமணம் செய்து கொண்டு 18 லட்சம் பணத்தை ஏமாற்றியதாக தொழிலதிபர் ராஜ் கண்ணன் என்பவர் புகாரளித்திருந்தார்.இதனையடுத்து ரிஹானா பேகமும், தொழில் தொடங்குவதற்காக என்னிடம் வாங்கிய 20 லட்சம் ரூபாயை ராஜ் கண்ணன் திருப்பி தரவில்லை, எனக்கு தெரியாமலேயே என்னை திருமணம் செய்து கொண்டார் என்று பகிரங்கமான குற்றச்சாட்டுக்களை கூறினார். இதுதொடர்பாக இருவரும் மாறிமாறி புகாரளித்து வந்தனர்.சமீபத்தில் ரிஹானா அளித்த பேட்டியில், நடந்த சம்பவம் என்ன என்பதை விவரித்துள்ளார். அதில், அந்த ஆளு எனக்கு கணவர்லாம் கிடையாது. என்னோட இரண்டு குழந்தைகளின் அப்பா தான் என் கணவர், எனக்கு ஒரு கல்யாணம் தான் ஆச்சு, அதுவும் தலாக்ல முடிந்துவிட்டது. அவன் பண்ணது சீட்டிங் தானே தவிர கல்யாணம் கிடையாது.என் கண்ணைமூட வைத்து சர்ப்ரைஸ்ன்னு சொல்லி ஜெயின் போட்டான். என்னால் ஒன்னும் பண்ணமுடியவில்லை, அவனுடைய குணம் என்னன்னு தெரிந்துதான் ஒன்னும் பண்ணமுடியவில்லை. நான் அடுத்தவங்க காசுக்கு ஆசைப்படலையே. என் பணத்தை நான் இன்வெஸ்ட் பண்றேன், நான் ஆசைப்படுறேன்.அவனோட காசுக்கு நான் ஆசைப்பட்டாதான பேசலாம். நம்ம ஆசைப்படலாம், ஆனால் பேராசைப்பட்டுட்டேன் அந்த இடத்துல. அதுக்கு பலன் தான் இன்னைக்கு உட்கார்ந்து நான் இவ்ளோ ஆதாரங்களை எடுத்துகிட்டு கோர்ட், போலிஸ் ஸ்டேஷன், மகளில் ஆணையம்ன்னு அங்கும் இங்கும் சுத்திட்டு இருக்கேன்.காரணமே அந்த பேராசைதான்னு இன்னைக்கு எனக்கு புரிய வச்சது. எனக்கு தெரிஞ்சு 6 பெண்களுடன் தொடர்பு வைத்திருக்கிறான், அந்த பெண்களே என்னிடம் அவனை பற்றிய உண்மைகளை கூறியிருக்கிறார்கள் என்று ரிஹானா தெரிவித்துள்ளார்.