இலங்கை
காணாமல் போன மனித உரிமை ஆர்வலர்கள்: கோத்தாபய சாட்சி வழங்க தயார்!

காணாமல் போன மனித உரிமை ஆர்வலர்கள்: கோத்தாபய சாட்சி வழங்க தயார்!
2011 ஆம் ஆண்டு காணாமல் போன இரண்டு மனித உரிமை ஆர்வலர்களான லலித் வீரராஜ் மற்றும் குகன் முருகானந்தன் ஆகியோரின் வழக்கு ஒன்று குறித்து சாட்சி வழங்க தயார் என முன்னாள் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச அறிவித்துள்ளார்.
குறித்த அறிவிப்பை இன்று (30) தனது சட்டத்தரணிகள் மூலம் உயர் நீதிமன்றத்தில் அவர் வெளியிட்டுள்ளார்.
இது தொடர்பான வழக்கானது, காணாமல் போன இரண்டு மனித உரிமை ஆர்வலர்களினதும் உறவினர்களினால் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அதன்படி, இந்த விவகாரம் தொடர்பான மேல்முறையீட்டு மனு இன்று உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இந்த நிலையில், முன்னாள் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்சவுக்காக முன்னிலையான ஜனாதிபதி சட்டத்தரணி ரொமேஷ் டி சில்வா இந்த அறிவிப்பை வெளியிட்டார்.