இலங்கை
குடும்பத்துடன் உயிர்மாய்த்த பிரதேச சபை உறுப்பினர் மரணம் – வெளியான தகவல்கள்!

குடும்பத்துடன் உயிர்மாய்த்த பிரதேச சபை உறுப்பினர் மரணம் – வெளியான தகவல்கள்!
கண்டி – யட்டிநுவர பிரதேச சபையின் ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினரான சம்பிக்க நிலந்த, அவரது மனைவி மற்றும் மூத்த மகள் ஆகியோரின் மரணம் தொடர்பாகப் பல தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்தநிலையில் அவர் எழுதியதாகக் கூறப்படும் கடிதத்தில் கண்டியைச் சேர்ந்த ஒரு மூத்த காவல்துறை அதிகாரியின் பெயரும் குறிப்பிடப்பட்டுள்ளது.
விஜேசிங்க என்ற நபர் தன்னை ஒரு வழக்கறிஞரிடம் அழைத்துச் சென்று 5 லட்சம் ரூபா பணத்தையும் ஒரு சிற்றூர்ந்தையும் வலுக்கட்டாயமாகப் பெயர் மாற்றியதாகக் குறித்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இறுதியாக, அந்தக் கடிதத்தில், ‘எங்கள் குடும்பத்திற்கு நீங்கள் செய்ததற்குப் பொறுப்பேற்க வேண்டும், விஜேசிங்க சொன்னது எனது வாட்ஸ்அப்பில் உள்ளது’ என்று குறிப்பிடப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
அதேநேரம், சம்பிக்க நிலந்தவின் இளைய மகளும் பல முக்கியமான தகவல்களை காவல்துறையிடம் வெளிப்படுத்தியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.