இலங்கை
குழந்தைகள் மீது பாலியல் துஷ்பிரயோகம் ; இந்திய வம்சாவளி துணை விமானி கைது

குழந்தைகள் மீது பாலியல் துஷ்பிரயோகம் ; இந்திய வம்சாவளி துணை விமானி கைது
அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோ விமான நிலையத்தில், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த துணை விமானி ருஸ்டம் பகவாகர் குழந்தைகள் மீது பாலியல் துஷ்பிரயோக குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார்.
டெல்டா ஏர்லைன்ஸ் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த பகவாகர், மின்னியாபோலிஸிலிருந்து புறப்பட்டு சான் பிரான்சிஸ்கோவிற்கு வந்த டெல்டா போயிங் விமானத்தின் விமானி அறையில் இருந்து, விமானம் தரையிறங்கிய பின்னர் அமெரிக்க பொலிஸாரால் கைது செய்யப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த குற்றச்சாட்டுகளை விசாரிக்க அமெரிக்க பொலிஸார் கடந்த ஏப்ரல் மாதம் முதல் விசாரணை முன்னெடுத்து வருகின்றனர்.
குற்றச்சாட்டு தொடர்பான தடையுத்தரமான ஆதாரங்கள் கிடைத்ததாகக் கூறப்படுவதன் அடிப்படையில், அதிகாரிகள் நேரடியாக விமானத்துக்குள் சென்று கைது நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர்.
இவ்விசாரணை மற்றும் கைது சம்பவம் குறித்து, டெல்டா ஏர்லைன்ஸ் நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில், “பகவாகர் மீது தொடரும் குற்றச்சாட்டுகள் மிகவும் கவலையளிக்கக்கூடியவை.
அவர் தற்போது பணியில் இருந்து இடைநீக்கப்பட்டுள்ளார்,” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் விமானியர்கள், விமானப்பயணிகள் மற்றும் விமானப் பாதுகாப்பு தொடர்பாக பல கேள்விகளை எழுப்பியுள்ளதாகவும், மேலதிக விசாரணைகள் தொடரும் எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.