இலங்கை
கோப்பாயில் விபத்து 7 பேருக்குக் காயம்!

கோப்பாயில் விபத்து 7 பேருக்குக் காயம்!
யாழ்ப்பாணம் – கோப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் நேற்று தனியார் பேருந்தொன்றும், சொகுசு வாகனமொன்றும் நேருக்கு நேர் மோதி விபத்துக்கு உள்ளானதில் ஏழு பேர் காயமடைந்தனர்.
கோப்பாய் கிறிஸ்தவக் கல்லூரிக்கு அருகாமையில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. தனியார் பேருந்தில் பயணித்த ஆறு பேர் காயமடைந்த நிலையில், சொகுசுக் காரில் பயணித்த நபரொருவருக்கு கால் முறிவு ஏற்பட்டுள்ளது. சொகுசுக்கார் தனது வழித்தடத்தை விட்டு விலகி, எதிர்முனை வாகனங்கள் பயணிக்கும் பகுதிக்குள் சென்றமையால் இந்த விபத்து சம்பவித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மேலதிக விசாரணைகள் இடம்பெற்றுவருகின்றன.