Connect with us

இலங்கை

சர்வதேச ரீதியில் முதல் இடத்தை பிடித்த இலங்கை

Published

on

Loading

சர்வதேச ரீதியில் முதல் இடத்தை பிடித்த இலங்கை

 உலகப்புகழ்பெற்ற சுற்றுலா இணையதளமான பிக் செவன் ட்ரவல் Big 7 Travel வெளியிட்ட “உலகின் சிறந்த 50 தீவுகள்” பட்டியலில், இலங்கை முதலிடத்தைப் பெற்றுள்ளது.

2025ல் உலகில் பார்க்க வேண்டிய அழகான தீவுகளில் இலங்கை முதலிடத்தில் இருப்பது பெரும் பெருமைக்குரியதாக கருதப்படுகின்றது.

Advertisement

இந்த பட்டியலில், பிரெஞ்சு போலினீசியாவின் மோஉரோ (Mo’orea), எக்வடாரின் கலபகோஸ் தீவுகள் (Galápagos Islands), மற்றும் சீஷெல்ஸ் (Seychelles) உள்ளிட்ட பல பிரபல சுற்றுலா தீவுகள் இடம் பெற்றுள்ளன.

இலங்கையின் பல்வேறு பண்பாட்டு பாரம்பரியம், பசுமை நிறைந்த இயற்கைக் காட்சிகள், மற்றும் அழகான கடற்கரைகள் ஆகியவை இலங்கையை இம்மாதிரியான பட்டியலில் முதலிடத்திற்கு கொண்டுவந்த காரணிகளாகும் என பிக் செவன் ட்ரவல் இணைய தளம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

மேலும், வனவிலங்குகள் பார்வை அனுபவங்கள், பழமையான பௌத்த விஹாரைகள், தேன் மலைகள் மற்றும் தேயிலை தோட்டங்கள், மற்றும் வண்ணமயமான உள்ளூர் கலாச்சார அனுபவங்கள் ஆகியவை இலங்கையின் சிறப்பாக வலியுறுத்தப்பட்டுள்ளன.

Advertisement

2025ஆம் ஆண்டுக்கான உலகின் சிறந்த 10 தீவுகள் பட்டியல்:

1. இலங்கை

2. மோஉரோ (Mo’orea) – பிரெஞ்சு போலினீசியா

Advertisement

3. சோகோட்ரா (Socotra) – யேமன்

4. மடெய்ரா (Madeira)

5. கலபகோஸ் தீவுகள் (Galápagos) – எக்வடார்

Advertisement

6. கிரேட் எக்ஸூமா (Great Exuma) – பஹாமாஸ்

7. சீஷெல்ஸ் (Seychelles)

8. ஆச்சில் தீவு (Achill Island) – அயர்லாந்து

Advertisement

9. கோ லிபே (Koh Lipe) – தாய்லாந்து

10. மிலோஸ் (Milos) – கிரீஸ்

இந்த அங்கீகாரம், இலங்கையின் சுற்றுலா துறைக்கு மிகப் பெரிய ஊக்கமாகும் எனப் பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது. 

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன