இலங்கை
ஜின் கங்கைக்கு சென்ற 22 வயது இளைஞர் பலி ; தீவிரமாகும் விசாரணைகள்

ஜின் கங்கைக்கு சென்ற 22 வயது இளைஞர் பலி ; தீவிரமாகும் விசாரணைகள்
காலி, ஜின்தொட்ட பகுதியில் உள்ள ஜின் கங்கைக்கு நீராடச் சென்ற இளைஞர் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவம் நேற்று (29) இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்தவர் ஜின்தொட்ட கருவாத்தோட்டம் பகுதியைச் சேர்ந்த 22 வயது இளைஞர் என தெரியவந்துள்ளது.
குறித்த இளைஞர் ஜின் கங்கையில் நீராடச் சென்றபோது நீரில் இழுத்துச் செல்லப்பட்டுள்ளார்.
இந்நிலையில், அப்பகுதி மக்கள், கடற்படை நீச்சல் வீரர்கள் மற்றும் பொலிஸார் இணைந்து இளைஞனைத் தேடும் நடவடிக்கையை மேற்கொண்டனர்.
இதன் பின்னர், நீச்சல் வீரர்கள் இளைஞனின் உடலைக் கண்டுபிடித்து, பிரேத பரிசோதனைக்காக காலி தேசிய வைத்தியசாலைக்கு எடுத்துச் சென்றனர்.
மேலும், இந்த சம்பவம் குறித்து காலி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.