Connect with us

இலங்கை

தகவல் அறியும் உரிமைக்கான ஆணைக்குழுவுக்கு தலைவரை நியமிக்க கோரி வழக்கு தாக்கல்!

Published

on

Loading

தகவல் அறியும் உரிமைக்கான ஆணைக்குழுவுக்கு தலைவரை நியமிக்க கோரி வழக்கு தாக்கல்!

தகவல் அறியும் உரிமைக்கான ஆணைக்குழுவுக்கு பதில் தலைவரை நியமிக்க ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுக்கு உத்தரவிடக் கோரி உயர் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமைகள் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

ஊடகவியலாளர் மிதுன் ஜயவர்தன மற்றும் தெயட சவிய அமைப்பு தாக்கல் செய்த இந்த மனுவில், ஜனாதிபதி, அவரது செயலாளர், சபாநாயகர் மற்றும் அரசியலமைப்பு பேரவையின் உறுப்பினர்கள் ஆகியோர் பிரதிவாதிகளாகக் குறிப்பிடப்பட்டுள்ளனர்.

Advertisement

ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதியரசர் உபாலி அபேரத்னவின் பதவி விலகலைத் தொடர்ந்து, கடந்த மார்ச் 9ஆம் திகதி முதல் அந்த ஆணைக்குழுவின் தலைவர் பதவி வெற்றிடமாக உள்ளதாக மனுவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இந்த வெற்றிடம் தகவல் அறியும் உரிமைகள் தொடர்பான விசாரணைகளை இடைநிறுத்தியுள்ளதாகவும் 2016ஆம் ஆண்டு 12ஆம் இலக்க தகவலறியும் உரிமை சட்டத்தின் கீழ் உறுதிப்படுத்தப்பட்டுள்ள தகவல்களை அணுகும் பொதுமக்களின் உரிமை மீறப்படுவதாகவும் மனுதாரர்கள் கூறுகின்றனர். 

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன