இலங்கை
தாதியர் வேலைக்கு காத்திருப்போருக்கு மகிழ்ச்சித்தகவல்

தாதியர் வேலைக்கு காத்திருப்போருக்கு மகிழ்ச்சித்தகவல்
தாதியர் பயிற்சிக்கான ஆட்சேர்ப்பு இடம்பெறவுள்ள நிலையில் 2020, 2021 மற்றும் 2022 கா.பொ.த (உ/த) பரீட்சையில் உயிரியல், கணிதம் மற்றும் விவசாய பிரிவில் தோற்றியோர் விண்ணப்பிக்க முடியும்.
கல்வித் தகைமை: க.பொ.த (சா/த) பரீட்சையில் தமிழ், கணிதம், விஞ்ஞானம், மற்றும் ஆங்கிலத்தில் திறமைச் சித்தியுடன் இரு தடவைக்கு மேற்படாத அமர்வுகளில் 6 பாடங்களில் சித்தியடைந்திருக்க வேண்டும்.
அத்துதுடன் க.பொ.த (உ/த) பரீட்சையில் உயிரியல், கணிதம் அல்லது விவசாய பிரிவில் ஒரே தடவையில் 3 பாடங்களும் சித்தியடைந்திருத்தல் வேண்டும்.
அதேசமயம் 18 வயதிற்கு குறையாமலும் 28 வயதிற்கு கூடாமலும் இருப்பதுடன் திருமணம் ஆகாதவராகவும் இருக்கவேண்டும்.
விண்ணப்பங்கள் சுகாதார அமைச்சின் இணையத்தளமான “www. health.gov.lk” எனும் இணையவழியூடாக 12.08.2025 இற்கு முன்னர் விண்ணப்பிக்கலாம் எனவும் கூறப்படுகின்றது.