இலங்கை
நிலநடுக்கத்தால் அதிர்ந்த கட்டிடங்கள் ; உயிர் பயத்தின் மத்தியிலும் வைத்தியர்களின் நெகிழ்ச்சி செயல்

நிலநடுக்கத்தால் அதிர்ந்த கட்டிடங்கள் ; உயிர் பயத்தின் மத்தியிலும் வைத்தியர்களின் நெகிழ்ச்சி செயல்
ரஷ்யாவை இன்று அதிகாலை பாரிய நிலநடுக்கம் தாக்கியிருந்தது. இதன் போது புற்றுநோய் மருத்துவமனையில் வைத்தியர்கள் செய்த நெகிழ்ச்சி செயல் தற்போது வைரலாகி வருகிறது.
ரஷ்யாவின் கிழக்கு கடற்கரையில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்திற்குப் பிறகு கம்சட்கா தீபகற்பத்தில் இன்று (30) அதிகாலை 8.7 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் பதிவானது.
நிலநடுக்கத்தைத் தொடர்ந்து ஜப்பான், ரஷ்யாவில் சுனாமி ஏற்பட்டதுடன் பல நாடுகளின் கடலோரப் பகுதிகளுக்கும் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்படுள்ளது.
நில அதிர்வு ஏற்பட்ட கம்சட்கா பகுதியிலிருந்து பல வீடியோக்கள் சமூக ஊடகங்களில் வெளிவந்தன, ரஷ்யாவின் அரசு கட்டுப்பாட்டில் உள்ள சர்வதேச செய்தி வலையமைப்பொன்று கம்சட்காவில் உள்ள ஒரு புற்றுநோய் மருத்துவமனையின் வீடியோவைப் பகிர்ந்து கொண்டது.
குறித்த வீடியோ மருத்துவமனையின் அறுவை சிகிச்சை அறையில் எடுக்கப்பட்டுள்ளதுடன் மேலும் நிலநடுக்கம் அந்தப் பகுதியை உலுக்கியபோது மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்வதைக் காட்டுகிறது.
கட்டிடத்தையே பலத்த நிலநடுக்கம் உலுக்கிய போதிலும், மருத்துவர்கள் அமைதியாக இருந்து, இறுதிவரை தங்கள் நோயாளிக்கு அறுவை சிகிச்சையைத் தொடர்ந்துள்ளனர்.
ரஷ்யாவின் சுகாதார அமைச்சகத்தை மேற்கோள் காட்டி, அறுவை சிகிச்சை நன்றாக நடந்ததாகவும், நோயாளி குணமடைந்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.