இலங்கை
நேற்று பொலிஸாரிடம் சிக்கிய துப்பாக்கிதாரி இன்று தப்பியோட்டம்

நேற்று பொலிஸாரிடம் சிக்கிய துப்பாக்கிதாரி இன்று தப்பியோட்டம்
பாணந்துறையில் நடந்த இரண்டு துப்பாக்கிச் சூடு சம்பவங்களில் சம்பந்தப்பட்ட சந்தேக நபர் ஒருவர், இரத்தினபுரி பொலிஸ் நிலையத்திலிருந்து இன்று (30) காலை தப்பிச் சென்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குற்றப் புலனாய்வுத் துறையினரால் கைதுசெய்யப்பட்ட இந்த சந்தேக நபர், நேற்று (29) இரவு இரத்தினபுரி பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டார்.
இன்று காலை 7:03 மணியளவில், பொலிஸ் அதிகாரி கழிப்பறைக்குச் செல்ல கதவைத் திறந்தபோது, தப்பிச் சென்றுள்ளதாக தெரியவந்துள்ளது.
இரத்தினபுரி, அங்கம்மன பகுதியைச் சேர்ந்த இவர், இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவிருந்தார்.
குறித்த சந்தேக நபரை தேடும் பணியில் பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர்.