இலங்கை
பாதாளக்குழுக்களுடன் அரசாங்கத்துக்கு ‘டீல்’; சாகர காரியவசம் குற்றச்சாட்டு

பாதாளக்குழுக்களுடன் அரசாங்கத்துக்கு ‘டீல்’; சாகர காரியவசம் குற்றச்சாட்டு
அரசாங்கத்துக்கு எதிராக எதிர்காலத்தில் மக்கள் போராட்டம் உருவாகும் என்பது அரசாங்கத்துக்குத் தெரியும். அதை முடக்குவதற்கு பாதாள உலகக் குழுக்களின் உதவி தேவை. அதனால் தான் அவர்களின் செயற்பாடுகளை அனுமதித்து விட்டு அரசாங்கம் வேடிக்கை பார்க்கின்றது என்று மொட்டுக் கட்சியின் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:-
இந்தியாவுடன் இலங்கை அரசாங்கம் செய்துகொண்ட பாதுகாப்பு ஒப்பந்தத்தை இன்னும் வெளியிடாமல் மறைத்து வைத்திருப்பது பாரதூரமான செயலாகும்.
நாட்டில் பிரஜைகளின் இந்த அடிப்படை உரிமை இப்போது இல்லாமல் போயுள்ளது. அதற்குக் காரணம் பாதாள குழுக்களின் செயற்பாடுகள் இந்த ஆட்சியில் அதிகரித் துள்ளமைதான். கோத்தாபய ராஜபக்சவின் ஆட்சியில் பாதாளக் குழுக்கள் முடக்கப்பட்டிருந்தன. அநுரவின் ஆட்சியில் அவை தீவிரமாகச் செயற்படுகின்றன – என்றார்.