இலங்கை
மனைவியுடன் தகாத உறவு ; கள்ளகாதலனுக்கு சம்பவம் செய்த கணவன்

மனைவியுடன் தகாத உறவு ; கள்ளகாதலனுக்கு சம்பவம் செய்த கணவன்
தெஹியோவிட்ட, கஹனவிட்ட பகுதியில் நபர் ஒருவர் தனது மனைவியுடன் திருமணத்திற்கு அப்பாற்பட்ட உறவைக் கொண்டிருந்த ஒருவரைக் கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்ததாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
உயிரிழந்தவர் குறித்த பெண்ணுடனும் அவரது விசேட தேவையுடைய குழந்தையுடனும் ஏழு நாட்களுக்கு முன்னர் தெஹியோவிட்ட, கஹனவிட்ட பகுதியில் வாடகை வீடொன்றில் குடியேறியுள்ளனர்.
குறித்த பெண்ணின் கணவர் நேற்று இரவு வீட்டிற்கு வந்திருந்ததாகவும், அங்கு வாக்குவாதம் ஏற்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
பின்னர் குறித்த பெண்ணின் கணவர், மனைவியுடன் திருமணத்திற்கு அப்பாற்பட்ட உறவைக் கொண்டிருந்த நபரைக் கூரிய ஆயுதத்தால் தாக்கியுள்ளதாகத் தெரியவந்துள்ளது.
தாக்குதலுக்குள்ளான நபர் கரவனெல்ல ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.
அத்துடன் பிரதேசவாசிகளின் உதவியுடன் சந்தேக நபர் இன்று கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.