Connect with us

பொழுதுபோக்கு

முதல் படத்துக்கு தியேட்டரில் ஈ, காக்கா‌ இல்ல; 2-வது பட ரிலீஸ் அப்போ தெருவில் செம்ம கூட்டம்: சுந்தர்.சி ஃப்ளாஷ்பேக்!

Published

on

Sundar c childhood photos Tamil News

Loading

முதல் படத்துக்கு தியேட்டரில் ஈ, காக்கா‌ இல்ல; 2-வது பட ரிலீஸ் அப்போ தெருவில் செம்ம கூட்டம்: சுந்தர்.சி ஃப்ளாஷ்பேக்!

இயக்குநர் சுந்தர்.சி தனது திரைப் பயணத்தில் மறக்க முடியாத அனுபவங்களில் ஒன்றாக ‘மேட்டுக்குடி’ திரைப்படத்தைக் குறிப்பிடுகிறார். கலாட்டா யூடியூப் பக்கத்தில் அவர் பகிர்ந்து கொண்ட தகவலின்படி, இந்தப் படம் அவருக்கு ஒரு மகிழ்ச்சியான அனுபவத்தைத் தந்திருக்கிறது.சுந்தர்.சி தமிழ் சினிமாவில் ஒரு வெற்றி இயக்குநராக, நடிகராக மற்றும் தயாரிப்பாளராக வலம் வருகிறார். இவரது திரைப் பயணம் 1990களில் உதவி இயக்குநராக தொடங்கியது. பிரபல இயக்குநர் மணிவண்ணனிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றி, திரைப்படத் தயாரிப்பின் நுணுக்கங்களைக் கற்றுக்கொண்டார். மணிவண்ணன் இயக்கிய ‘வாழ்க்கை சக்கரம்’ திரைப்படத்தில் காவலராக ஒரு சிறு வேடத்தில் நடித்ததன் மூலம் நடிகராக அறிமுகமானார்.1995 ஆம் ஆண்டு வெளியான ‘முறை மாமன்’ திரைப்படம் மூலம் இயக்குநராகத் தனது பயணத்தைத் தொடங்கினார். ஆரம்ப காலத்திலேயே, உள்ளத்தை அள்ளித்தா, மேட்டுக்குடி, அருணாச்சலம் போன்ற வெற்றிப் படங்களைக் கொடுத்து ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தார். குறிப்பாக, ‘அருணாச்சலம்’ உச்ச நட்சத்திரமான ரஜினிகாந்தை இயக்கும் வாய்ப்பைப் பெற்று, ஒரு மெகா ஹிட்டாக அமைந்தது.இந்நிலையில் அவர் படங்கள் வெளியானபோது சந்தித்தபோது சில சிக்கல்களை பற்றி அவர் கூறியுள்ளார். சுந்தர்.சி இயக்கத்தில் வெளியான ‘உள்ளத்தை அள்ளித்தா’ திரைப்படம் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றி பெறாமல், திரையரங்குகள் காலியாக இருந்ததை கண்டு அவர் அதிர்ச்சியடைந்தாராம். தியேட்டர் உரிமையாளர்கள் கூட படம் ஓடாது என்று கூறியதாகவும் அவர் நினைவுகூர்ந்தார். இந்தச் சூழலில்தான் ‘மேட்டுக்குடி’ வெளியானது.’மேட்டுக்குடி’ வெளியான முதல் நாளில், திரையரங்குகளில் பார்வையாளர்கள் இன்றி வெறிச்சோடிக் கிடந்தது. அன்றைய நிலையை விவரிக்கையில், “தியேட்டரில் ஈ, காக்கா கூட இல்லை” என்று சுந்தர்.சி தெரிவித்தார். ஆனால், நிலைமை தலைகீழாக மாறியது. வெளியான ஆறு மாதங்களுக்குப் பிறகு, அதே ‘மேட்டுக்குடி’ திரைப்படம் மாபெரும் வெற்றியைப் பெற்றது. ஆறாவது மாதத்தில், “தெருவில் செம்ம கூட்டம்” என்று கூறும் அளவுக்கு மக்கள் வெள்ளம் திரையரங்கை நோக்கி அலைமோதியது. இது சுந்தர்.சிக்கு ஒரு மறக்க முடியாத திருப்புமுனையாகவும், மிகுந்த மகிழ்ச்சியளிக்கும் அனுபவமாகவும் அமைந்தது.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன