இலங்கை
முத்து நகர் விவசாயிகள் மீதான காவல்துறையினர் தாக்குதல் : நாடாளுமன்ற உறுப்பினர் கண்டிப்பு!

முத்து நகர் விவசாயிகள் மீதான காவல்துறையினர் தாக்குதல் : நாடாளுமன்ற உறுப்பினர் கண்டிப்பு!
முத்து நகர் விவசாயிகள் மீதான காவல்துறையினரின் தாக்குதல் கண்டிக்கதக்கது என நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் தெரிவித்துள்ளார்.
இலங்கை துறைமுக அதிகாரசபையின் அபிவிருத்தி திட்டத்தின் கீழ் நிலங்களை இழக்கும் அபாயத்தில் உள்ள திருகோணமலை – முத்து நகர் பகுதி மக்களால் ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.
குறித்த ஆர்ப்பாட்டம் நேற்று (29) திருகோணமலை மாவட்ட செயலகத்தை முற்றுகையிட்டு முன்னெடுக்கப்பட்டது.
இந்த அமைதி போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் மீது காவல்துறையினர் மேற்கொண்ட தாக்குதல் கண்டிக்கதக்கது என இம்ரான் மஹ்ரூப் தெரிவித்துள்ளார்.
தாம் ஆட்சிக்கு வந்தவுடன் முத்துநகர் காணிப்பிரச்சினைக்கு தீர்வு பெற்று தருவோம் என கூறிய இந்த அரசாங்கம் தற்போது அந்த விவசாயிகளை எதிர்கொள்ள முடியாமல் காவல்துறையினரை கொண்டு அவர்களை விரட்டுவது எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் அவர் கண்டனம் வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.