இந்தியா
‘மொழிவாரிப் பிரிவினையால் 2-ம் தர குடிமக்களாக மாறிய மக்கள்’: ஆளுநர் ரவி வேதனை

‘மொழிவாரிப் பிரிவினையால் 2-ம் தர குடிமக்களாக மாறிய மக்கள்’: ஆளுநர் ரவி வேதனை
இந்திய மாநிலங்களின் மொழிவாரிப் பிரிவினை “2-ம் தர குடிமக்களை” உருவாக்கியுள்ளதாக தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி கடும் கண்டனம் தெரிவித்தார். குஜராத் மாநிலம் காந்திநகரில் உள்ள ராஷ்ட்ரிய ரக்ஷா பல்கலைக்கழகத்தில் 2025-26 ஆம் கல்வி ஆண்டின் தொடக்க விழாவில் பேசிய அவர், தனது சொந்த மாநிலமான தமிழ்நாட்டையே உதாரணமாகக் காட்டினார்.ஆளுநர் ரவி பேசுகையில், “சுதந்திரத்திற்கு முன், ஒரே தேசிய மத்திய அரசு இல்லாவிட்டாலும் நாடு ‘ஐக்கியமாக’ இருந்தது. சுதந்திரத்திற்குப் பிறகு, ‘மொழிவாரி தேசியம்’ என்று நாம் ஒருவருக்கொருவர் சண்டையிடத் தொடங்கிவிட்டோம். சுதந்திரம் அடைந்து 10 வருடத்திற்குள் மொழி வாரி மாநிலங்கள் மறுசீரமைக்கப்பட வேண்டியிருந்தது. இது நாட்டின் பல பகுதிகளில் நடந்த வன்முறைப் போராட்டங்களுக்குப் பிறகு நடந்தது. மக்கள் ஒருவருக்கொருவர் வாழ மறுக்கத்தொடங்கினர். நாம் மொழிவாரி மாநிலங்களை உருவாக்கியபோது, பெரிய மக்கள் தொகை 2-ம் தர குடிமக்களாக மாறினர்” என்று வேதனை தெரிவித்தார்.இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்கதமிழ்நாட்டில், தெலுங்கு, தமிழ், கன்னடம், குஜராத்தி, மராத்தி, இந்தி போன்ற பல்வேறு மொழி பேசும் மக்கள் அனைவரும் ஒன்றாக வாழ்கிறார்கள். ஆனால், அது மொழிவாரி மாநிலமாக மாறியவுடன், மக்கள் தொகையில் 3-ல் ஒருபகுதியினர் 2-ம் தர குடிமக்களாக மாறினர் என்று ஆளுநர் ரவி சுட்டிக்காட்டினார். இது நாட்டின் மற்ற பகுதிகளிலும் நடந்ததாக அவர் குறிப்பிட்டார்.”ஆபரேஷன் சிந்துர் வரலாற்று உதாரணம்””ஆபரேஷன் சிந்துர்” (Operation Sindoor) குறித்துப் பேசிய ஆளுநர் ரவி, “குறுகிய, வேகமான முறையில் நாடு தனது அரசியல் நோக்கத்தை ராணுவ வழிகளில் எவ்வாறு அடைய முடியும் என்பதற்கு” இது வரலாற்றில் உதாரணமாக நிலைத்து நிற்கும் என்றும், உலகளவில் போர் தொடங்குவது “எளிது” ஆனால் அதை முடிப்பது அவ்வளவு எளிதல்ல என்றும் பாராட்டினார்.”சுதந்திரத்திற்குப் பிறகு தேசம் பிளவுபட்டது””சுதந்திரத்திற்குப் பிறகு ஏதோ தவறாகப் போனது. தேசம் நமது மக்களை எல்லா வகையிலும் பிளவுபடுத்தும் ஒரு திசையில் கொண்டு செல்லப்பட்டது. அரசு இதை தவிர்க்க முடியாத இயற்கை நிகழ்வாக ஏற்றுக்கொண்டது” என்று ஆளுநர் ரவி கூறினார். “இன அடிப்படையிலான மாநிலங்களை உருவாக்குவது, ‘பாரத ராஷ்டிரத்தின்’ உணர்வின் மீதான தாக்குதல்” என்று ஆளுநர் குறிப்பிட்டார். “பாரதக் குடியரசு சுதந்திரத்திற்குப் பிறகு பிறந்தாலும், ராஷ்டிரமாக, அது 5,000 ஆண்டுகளாக இருந்து வருகிறது என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். துரதிர்ஷ்டவசமாக, சுதந்திரத்திற்குப் பிறகு, ராஷ்டிரத்தின் உணர்வு பலவீனமடைந்தது” என்றும் அவர் தெரிவித்தார்.வடகிழக்கு மாநிலங்களில் மாற்றங்கள், வளர்ச்சிபிரதமர் நரேந்திர மோடி, குஜராத் முதல்வராக இருந்தபோது, 2009-ல் ராஷ்ட்ரிய ரக்ஷா பல்கலைக்கழகத்தை (RRU) அமைத்ததை ஆளுநர் ரவி பாராட்டினார். இந்த நிறுவனம் “பிரதமரின் தொலைநோக்கு பார்வையுடன் ஒத்துப்போக வேண்டும்” என்றும் அவர் வலியுறுத்தினார். ஜம்மு காஷ்மீர், வடகிழக்கு மற்றும் மாவோயிஸ்ட் பகுதிகளில் உளவுத்துறையில் பணியாற்றிய முன்னாள் ஐபிஎஸ் அதிகாரியான ஆளுநர் ரவி, 2014 வரை “முழு வடகிழக்கும் எரிந்துகொண்டிருந்தது” ஆனால் இப்போது அது “சாதாரண நிலையை நோக்கி மிகமிக அருகில் உள்ளது” என்றார்.”வடகிழக்கு வன்முறை முக்கியத்துவம் இழந்தது,” என்று அவர் கூறி, புதிய விமான நிலையங்கள், 4 வழிச்சாலைகள், டிஜிட்டல் இணைப்பு, ரயில்வே போன்ற உள்கட்டமைப்புகளை உருவாக்குவதே இதற்குக் காரணம் என்று தெரிவித்தார். நாகாலாந்தை “இன அடிப்படையிலான மாநிலமாக” உருவாக்கியதை விமர்சித்த அவர், வன்முறை முடிவடையவில்லை என்றும், அந்தப் பகுதி “பிளவுபட” தொடங்கியது என்றும் கூறினார். “இனக்குழுக்களுக்கு தாய்நாடுகளை உருவாக்கிக்கொண்டே இருந்தீர்கள், அவர்களுக்குள்ளேயே சண்டையிடத் தொடங்கிய துணைக்குழுக்கள் இருந்தன. இது ஒரு அணுக்கருப் பிளவு போல இருந்தது. சமூகம் உடைந்து, அமைதியான பகுதியிலிருந்து 50-க்கும் மேற்பட்ட ஆயுதமேந்திய அமைப்புகளாக மாறியது,” என்று ஆளுநர் ரவி மேலும் தெரிவித்தார்.