சினிமா
மோகன்லால் வீட்டில் தங்க ரெடியா!! ஒரு நைட்டுக்கு எவ்வளவு ரெண்ட் தெரியுமா?

மோகன்லால் வீட்டில் தங்க ரெடியா!! ஒரு நைட்டுக்கு எவ்வளவு ரெண்ட் தெரியுமா?
சினிமா பிரபலங்களின் வீட்டு தோற்றத்தை பார்த்தாலும் இதுபோல் வீடு கட்டவேண்டும் என்ற ஆசை தோன்றும். ஒரு இடத்தை அடையாளப்படுத்தும் போது அந்த ஹீரோ, ஹீரோயின் வசிக்கும் இடம் என்று குறிப்பிடுவார்கள். அப்படி பிரபலங்கள் வசிக்கும் இடங்களின் மதிப்பும் விலையும் அதிகமாக இருக்கும்.அந்தவகையில் ஊட்டியில் இருக்கும் தனது வீட்டை வாடகைக்கு விட்டிருக்கிறார் மலையாள நடிகர் மோகன்லால். வல்டேல் ரயில்நிலையம் அருகே ஒரு கின்றின் மீது அமைந்துள்ள இந்த வீட்டின் பெயர் தான் ஹைடு அவே(Hideaway). இங்கு மோகன்லால் மற்றும் அவரது மனைவி, மகள், மகன் தங்கிய அறைகள் அவற்றின் அடையாளங்களோடு பராமரிக்கப்பட்டு வருகிறது.அந்த வீட்டில் மோகன்லால் நடித்த படங்களின் புகைப்படங்கள், குடும்பத்தினர் மற்றும் நண்பர்களின் படங்கள் இந்த வீட்டில் அமைக்கப்பட்டுள்ளதாம். இங்கிருக்கும் கன் ஹவுஸ்ஸில் இதுவரை படங்களில் மோகன்லால் பயன்படுத்திய துப்பாக்கிகள் உள்ளிட்ட ஆயுதங்களும் இங்கு வைக்கப்பட்டுள்ளதாம். பசுமை நிறைந்த தோட்டம், அங்கு உணவருந்தும் வசதிகளும் உள்ளதாம். 25 ஆண்டுகளுக்கு மேல் சமையல் பணி செய்து வரும் ஒரு சமையலரின் மேற்பார்வையில் தான் இங்கு உணவுகல் தயாரிக்கப்படுகிறது.அப்படி இந்த வீட்டில் ஓரிரவு தங்குவதற்கான வாடகை வரிக்கட்டணம் தவிர்த்த தொகையாக ரூ. 37,000 வசூலிக்கப்படுகிறதாம். கொச்சி பனம்பள்ளி பகுதியில், தான் வசித்த வீட்டை இதேபோன்று ரசிகர்கள் தங்கமிடமாக மோகன்லால் மாற்றியிருக்கிறார். இந்தாண்டின் தொடக்கத்தில் இந்த முயற்சியை அவர் மேற்கொண்டதால் அங்கு ஓரிரவு தங்குவதற்கான கட்டணமாக ரூ. 75,000 வசூலிக்கப்படுகிறதாம்.தற்போது மோகன்லாலில் ஹைடு அவே வீட்டின் புகைப்படங்கள் இணையத்தில் பகிரப்பட்டு வருகிறது.