இலங்கை
யாழ்ப்பாணம் – கண்டி ஏ 09 வீதி விபத்துஇல் குடும்பஸ்தர் பலி

யாழ்ப்பாணம் – கண்டி ஏ 09 வீதி விபத்துஇல் குடும்பஸ்தர் பலி
யாழ்ப்பாணம் – கண்டி ஏ 09 வீதியின் மதவாச்சி வெலிஓயா சந்திக்கு அருகில் இடம்பறெ்ற விபத்தில் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக மதவாச்சி பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த விபத்து நேற்று (29) மாலை இடம்பெற்றுள்ளது.
சாரதியின் கட்டுப்பாட்டை இழந்த லொறி ஒன்று வீதியில் பயணித்த மற்றுமொரு லொறி மற்றும் மோட்டார் சைக்கிளுடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்தில் மோட்டார் சைக்கிளின் செலுத்துனர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவத்தில் மதவாச்சி பகுதியை வசிப்பிடமாக கொண்ட 58 வயதுடைய குடும்பஸ்தர் ஒருவரே உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவரின் சடலம் மதவாச்சி வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
விபத்துடன் தொடர்புடைய லொறியின் சாரதியை பொலிஸார் கைது செய்துள்ளதுடன் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மதவாச்சி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.