Connect with us

இலங்கை

யாழ்ப்பாணம் மோட்டார் போக்குவரத்து திணைக்களம் உயர் பாதுகாப்பு வலயமா?

Published

on

Loading

யாழ்ப்பாணம் மோட்டார் போக்குவரத்து திணைக்களம் உயர் பாதுகாப்பு வலயமா?

யாழ்ப்பாணம் மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் அலுவலகத்தின் வாயிலானது உயர் பாதுகாப்பு வலயம் போன்று மூடப்பட்ட நிலையில் காணப்படுவதாவும் உள்ளே செல்ல வேண்டுமாக இருந்தால் பாதுக்காப்பு உத்தியோகத்தரின் அனுமதியின் பின்னர் தான் உள்ளே செல்ல வேண்டிய நிலை காணப்படுவதாகவும் மக்கள் விசனம் வெளியிட்டுள்ளனர். 

 இது குறித்து மேலும் தெரியவருகையில்,

Advertisement

 மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் உள்ளே பொதுமக்கள் செல்ல வேண்டுமாக இருந்தால் பாதுகாப்பு உத்தியோகத்தரிடம் காரணத்தை கூறி, அவர் அனுமதி வழங்கிய பின்னரே உள்ளே செல்லக்கூடிய நிலை காணப்படுகிறது

 பாதுகாப்பு உத்தியோகத்தர் மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் சேவைகள் பற்றிய முழுமையான அறிவு உடையவராக இருப்பதற்கு சந்தர்ப்பம் இல்லை.

ஆகையால் மக்கள் கூறுகின்ற பிரச்சினைகள் அவர்களுக்கு விளங்காமல் விட்டால் அவர்கள் உள்ளே செல்ல முடியாது என்ற நிலை காணப்படுகிறது.

Advertisement

 சேவையை பெறுவதற்கு செல்கின்ற பொதுமக்கள் அனைவரும் தமது பிரச்சினைகளை பாதுகாப்பு உத்தியோகத்தரிடம் கூறித்தான் அனுமதி பெற்று உள்ளே செல்ல வேண்டும் என்ற நடைமுறை எந்த அரச திணைக்களங்களங்களிலும் இல்லை.

 இவ்வாறான சூழ்நிலையில் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் உள்ள மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தில் இவ்வாறான நடைமுறை காணப்படுகின்றமை மக்கள் மத்தியில் விசனத்தை ஏற்படுத்தியுள்ளது.

 அத்துடன் சேவைகளை பெறுவதற்கு வருகின்ற பொதுமக்கள் அமர்வதற்கு என திணைக்கள வளாகத்தில் அமைக்கப்பெற்றுள்ள ஆசனங்களிலும் அவர்களை அமர்வதற்கு அனுமதிக்காது அவர்களை வெளியே காக்க வைக்கின்ற நிலைமை அங்கு காணப்படுகின்றது. 

Advertisement

 இதனால் சேவையை பெறுவதற்கு வருகின்ற இளையோர் முதல் முதியோர் வரை கால்கடுக்க வெளியே காத்துக்கொண்டு இருக்கின்றமையை அவதானிக்க முடிகின்றது.

 யாழ்ப்பாணம் மாவட்ட மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் இவ்வாறான முறைகேடான செயற்பாடு குறித்து மக்கள் விசனம் வெளியிடுகின்றனர்.

லங்கா4 (Lanka4)

Advertisement

அனுசரணை

images/content-image/1753819667.jpg

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன