இலங்கை
யாழ். மோட்டார் போக்குவரத்து திணைக்களம் உயர் பாதுகாப்பு வலயமா?

யாழ். மோட்டார் போக்குவரத்து திணைக்களம் உயர் பாதுகாப்பு வலயமா?
யாழ்ப்பாணம் மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் அலுவலகத்தின் வாயிலானது உயர் பாதுகாப்பு வலயம் போன்று மூடப்பட்ட நிலையில் காணப்படுவதாகவும், இதென்ன உயர் பாதுகாப்பு வலயமா? எனவும் மக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் உள்ளே பொதுமக்கள் செல்ல வேண்டுமாக இருந்தால் பாதுகாப்பு உத்தியோகத்தரிடம் காரணத்தை கூறி, அவர் அனுமதி வழங்கிய பின்னரே உள்ளே செல்லக்கூடிய நிலை காணப்படுகிறது .
சேவையை பெறுவதற்கு செல்கின்ற பொதுமக்கள் அனைவரும் தமது பிரச்சினைகளை பாதுகாப்பு உத்தியோகத்தரிடம் கூறித்தான் அனுமதி பெற்று உள்ளே செல்ல வேண்டும் என்ற நடைமுறை எந்த அரச திணைக்களங்களங்களிலும் இல்லை.
இவ்வாறான சூழ்நிலையில் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் உள்ள மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தில் இவ்வாறான நடைமுறை காணப்படுகின்றமை மக்கள் மத்தியில் விசனத்தை ஏற்படுத்தியுள்ளது.
அத்துடன் சேவைகளை பெறுவதற்கு வருகின்ற பொதுமக்களை வெளியே காக்க வைக்கின்ற நிலைமை அங்கு காணப்படுகின்றது.
மேலும் மக்களுக்கு விரைவாக சேவைகளை வழங்காமல் தேவையற்ற விதத்தில் அவர்களை வெளியே காக்க வைத்து அவர்களின் நேரத்தை வீணடிப்பு செய்கின்றமையை அங்கு அவதானிக்க முடிந்தது.
மக்கள் செலுத்தும் வரிப் பணத்தில் சம்பளம் பெறும் அதிகாரிகள் அதிகார துஷ்பிரயோகம் செய்வதாகவும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
யாழ்ப்பாண மாவட்ட மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் இவ்வாறான முறைகேடான செயற்பாடு தொடர்பில் நடவடிக்கை எடுக்க வேண்டுமென மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.