வணிகம்
ரிஸ்க் இல்லாத முதலீடு தேடுபவரா நீங்கள்? எஃப்.டி-க்கு அதிக வட்டி வழங்கும் டாப் வங்கிகளின் லிஸ்ட்

ரிஸ்க் இல்லாத முதலீடு தேடுபவரா நீங்கள்? எஃப்.டி-க்கு அதிக வட்டி வழங்கும் டாப் வங்கிகளின் லிஸ்ட்
இந்த ஆண்டு, ரிசர்வ் வங்கி ரெப்போ விகிதத்தை தொடர்ந்து குறைத்ததால், பெரும்பாலான வங்கிகள் ஃபிக்ஸட் டெபாசிட் மற்றும் கடன் மீதான வட்டி விகிதங்களையும் குறைத்துள்ளன. இருப்பினும், சில வங்கிகள் இன்னும் குறிப்பிட்ட அளவிற்கு வட்டி விகிதங்களை வழங்குகின்றன. இங்கு, வெவ்வேறு கால அளவுகளில் அதிக வட்டி விகிதங்களை வழங்கும் 6 வங்கிகளின் பட்டியலை காணலாம்.1. ஹெச்.டி.எஃப்.சி வங்கி (HDFC Bank): ஹெச்.டி.எஃப்.சி வங்கி 18-21 மாத கால வைப்பு தொகைக்கு 6.6% வட்டி விகிதத்தை வழங்குகிறது. மூத்த குடிமக்களுக்கு இதே கால அளவுகளுக்கு 7.10% வட்டி கிடைக்கும். இந்த விகிதங்கள் ஜூன் 25, 2025 முதல் அமலுக்கு வந்துள்ளன.2. ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி (ICICI Bank): இந்த தனியார் துறை வங்கி, 2 முதல் 10 ஆண்டுகள் வரையிலான ஃபிக்ஸட் டெபாசிட் காலத்திற்கு 6.6% வட்டி வழங்குகிறது. மூத்த குடிமக்கள் 7.10% வட்டி பெற தகுதியுடையவர்கள்.3. கோடக் மஹிந்திரா வங்கி (Kotak Mahindra Bank): இந்த தனியார் துறை வங்கி, 444 நாட்கள் ஃபிக்ஸட் டெபாசிட்டிற்கு 6.6% வட்டி வழங்குகிறது. மூத்த குடிமக்கள் தங்கள் வைப்பு தொகைக்கு கூடுதலாக 50 அடிப்படை புள்ளிகள் பெற தகுதியுடையவர்கள். இந்த விகிதங்கள் ஜூன் 18, 2025 முதல் அமலுக்கு வந்துள்ளன.4. ஃபெடரல் வங்கி (Federal Bank): இந்த தனியார் துறை வங்கி, 444 நாட்கள் வைப்பு தொகைக்கு 6.7% வட்டி வழங்குகிறது. மூத்த குடிமக்கள் கூடுதலாக 50 அடிப்படை புள்ளிகள் பெற தகுதியுடையவர்கள். இந்த விகிதங்கள் ஜூலை 17 முதல் அமலுக்கு வந்துள்ளன.5. ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா (SBI): இந்த பொதுத்துறை வங்கி, 2-3 வருட கால வைப்பு தொகைக்கு 6.45% வட்டி வழங்குகிறது. மூத்த குடிமக்களுக்கு கூடுதலாக 50 அடிப்படை புள்ளிகள் வழங்கப்படுகின்றன. சமீபத்திய விகிதங்கள் ஜூலை 15 முதல் அமலுக்கு வந்துள்ளன.6. பேங்க் ஆஃப் பரோடா (Bank of Baroda): இங்கு 444 நாட்கள் ஃபிக்ஸட் டெபாசிட்டுகளுக்கு 6.6% வட்டி வழங்கப்படுகிறது. மூத்த குடிமக்களுக்கு கூடுதலாக 50 அடிப்படை புள்ளிகள் வழங்கப்படுகின்றன. இந்த விகிதங்கள் ஜூன் 12, 2025 முதல் அமலுக்கு வந்துள்ளன.உங்கள் நிதி திட்டமிடலுக்கு இந்த தகவல் உதவியாக இருக்கும். உங்களுடைய தேவைகளுக்கு ஏற்ற சிறந்த வட்டி விகிதத்தை வழங்கும் வங்கியை தேர்ந்தெடுக்கும் முன், ஒவ்வொரு வங்கியின் விதிமுறைகளையும், நிபந்தனைகளையும் முழுமையாக ஆராய்ந்து பார்ப்பது அவசியம் ஆகும்.