சினிமா
விஜய்யின் “ஜனநாயகன்” மலேசியாவில் செம்ம வரவேற்பு…!ரூ.12 கோடிக்கு ஓவர்சீஸ் உரிமை…!

விஜய்யின் “ஜனநாயகன்” மலேசியாவில் செம்ம வரவேற்பு…!ரூ.12 கோடிக்கு ஓவர்சீஸ் உரிமை…!
தளபதி விஜய் நடிப்பில் உருவாகி வரும் மிகுந்த எதிர்பார்ப்புக் கிளப்பியுள்ள “ஜனநாயகன்” படத்தின் படப்பிடிப்பு அதிகாரபூர்வமாக முடிந்துவிட்டது. தற்போது, கே. வி. என் புரொடக்சன்ஸ் தயாரிப்பில் உருவாகும் இந்த அரசியல் ஜனநாயகன் படத்தின் வெளியீட்டுக்கான வேலைகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.முக்கியமாக, மலேசியா ஓவர்சீஸ் விநியோக உரிமை மட்டும் ரூ.12 கோடிக்கு விற்பனையானது இந்தப் படத்தின் பிளட்செட் விலையை வெளிக்கொணர்கிறது. இது விஜய் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.மேலும், “ஜனநாயகன்” படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா மலேசியாவில் நடைபெற இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த விழாவில் தளபதி விஜய் நேரில் கலந்து கொள்வாரா என்பது தற்போது ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. இந்த மொக இவண்ட், மலேசியாவில் நடைபெறும் மிகப்பெரிய தமிழ் சினிமா விழாவாக மாறும் என எதிர்பார்க்கப்படுகிறது.