Connect with us

சினிமா

16 வயசுல நிச்சயம்..18 வயசுல கல்யாணம்!! கமல் ஹாசன் குறித்து லட்சுமி ராமகிருஷ்ணன் காட்டம்..

Published

on

Loading

16 வயசுல நிச்சயம்..18 வயசுல கல்யாணம்!! கமல் ஹாசன் குறித்து லட்சுமி ராமகிருஷ்ணன் காட்டம்..

ரசிகர்களை வயிறு குலுங்க சிரிக்க வைக்கும் நிகழ்ச்சி தான் குக் வித் கோமாளி. தற்போது, இந்த நிகழ்ச்சியில் நடிகையும், இயக்குநருமான லட்சுமி ராமகிருஷ்ணன் போட்டியாளராக கலந்து கொண்டு வருகிறார். கல்லூரி காலத்தில் கமல்ஹாசன் மீது இவருக்கு இருந்த காதல் குறித்து அவர் பேசிய விஷயம் இணையத்தில் வைரலாகி வருகிறது.அதில், ” நான் கல்லூரி படிக்கும் போதிலிருந்தே கமல்ஹாசனை காதலித்தேன். ஒருமுறை வாய்ப்பு கிடைத்தபோது அவரை நேரில் பார்க்கச் சென்றேன். அப்போது என் காதலை அவரிடம் சொல்ல முற்பட்டபோது, திடீரென அவர் என்னை ‘தங்கை’ என்று அழைத்துவிட்டார்.இதனால் என் காதலை அவரிடம் சொல்லாமல் வந்து விட்டேன் என்று கூறியிருந்தார். ஆனால் இந்த தகவல் வேறுமாதிரியான கண்ணோட்டத்தில் பார்க்கப்பட்டதை அறிந்த லட்சுமி ராமகிருஷ்ணன், தான் கூறியது குறித்து விளக்கம் கொடுத்துள்ளார்.அதில், நான் 16ஆம் வயதில் நிச்சயதார்த்தம் செய்து, 18ஆம் வயதில் திருமணம் செய்தேன். 42வது வயதுவரை எனக்கு சினிமா உலகத்துடன் எந்த தொடர்பும் இல்லை. மற்ற பலர்போலவே, நான் நட்சத்திரங்களை ஒரு ரசிகையாகவும், குழந்தைபோன்ற ஆச்சரியத்துடனும் பார்த்தவள்தான்.45வது வயதில் ஒரு பிரபல நடிகரை நேரில் சந்தித்தபோது, உண்மையிலேயே star-struck ஆகிவிட்டேன். அவர் என்னைப் பார்த்து, “என் சகோதரி மாதிரி இருக்கிறீர்கள்” என்று சொன்னதும், என் நண்பர்கள் நகைச்சுவையாக கலாய்த்தார்கள்.இதைத்தான் நான் குக் வித் கோமாளியில் நன்றாக ரசித்து பகிர்ந்தேன். இதைப் தவறாக புரிந்து, செய்தியாக மாற்றி பரப்புவது நியாயமற்றதுமே அல்லாமல், மிகுந்த நாகரிகமற்றதும்கூட என்று காட்டமாக ஒரு பதிவினை பகிர்ந்துள்ளார்.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன