இலங்கை
2025 ஆம் ஆண்டின் அழகான தீவுகள் வரிசையில் முதலிடம் பிடித்த இலங்கை!

2025 ஆம் ஆண்டின் அழகான தீவுகள் வரிசையில் முதலிடம் பிடித்த இலங்கை!
உலகளாவிய பயண வலைத்தளமான ‘பிக் 7 டிராவல்’, உலகின் சிறந்த 50 தீவுகளின் வருடாந்திர பட்டியலை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது.
மேலும் 2025 ஆம் ஆண்டிற்கான ‘உலகின் மிக அழகான தீவு’ என்ற பட்டியலில் இலங்கை முதலிடத்தை பிடித்துள்ளது.
பட்டியலில் இலங்கை முதலிடத்திலும், அதைத் தொடர்ந்து பிரெஞ்சு பாலினேசியாவின் மோரியா மற்றும் ஏமனின் சோகோட்ரா ஆகியவை அடுத்தடுத்த இடங்களிலும் உள்ளன. போர்த்துகீசிய தீவான மடிரா மற்றும் ஈக்வடாரின் கலபகோஸ் ஆகியவை பட்டியலின் முதல் 5 இடங்களைப் பிடித்துள்ளன.
பயண தளத்தின்படி, இந்த ஆண்டு பார்வையிட சிறந்த 10 தீவுகள் வருமாறு,
1. இலங்கை
2. மூரியா, பிரெஞ்சு பாலினீசியா
3. சோகோட்ரா, ஏமன்
4. மடீரா
5. கலபகோஸ், ஈக்வடார்
6. கிரேட் எக்ஸுமா, பஹாமாஸ்
7. சீஷெல்ஸ்
8. அச்சில் தீவு, அயர்லாந்து
9. கோ லிப், தாய்லாந்து
10. மிலோஸ், கிரீஸ்
லங்கா4 (Lanka4)
அனுசரணை