இலங்கை
840000 ரூபாய் பெறுமதியான 1200கிலோ தேயிலைதூள் மாயம்: தோட்ட உதவி முகாமையாளர் கைது!

840000 ரூபாய் பெறுமதியான 1200கிலோ தேயிலைதூள் மாயம்: தோட்ட உதவி முகாமையாளர் கைது!
கடந்த 23 ம் திகதி ஆர்.பி.கே.பிலான்டேசனுக்கு உரித்தான மஸ்கெலியா புரவுன்சீக் தோட்ட தேயிலை தொழிற்சாலையில் இருந்து 840000 ரூபாய் பெறுமதியான No 1 டஸ்ட், தேயிலை தூள் 1200 கிலோ 60 கிலோ எடை கொண்ட 20 பேக் சுரையாட பட்டு உள்ளது என தோட்ட முகாமையாளர் முதியான்சலாகே நிலுஷான் மதுசங்க ஜயவீர என்பவர் மஸ்கெலியா பொலிஸ் நிலையத்தில் புகார் ஒன்றை பதிவு செய்து உள்ளார்.
அதனைத் தொடர்ந்து மஸ்கெலியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி புஷ்பகுமார அவர்களின் பண்புரைக்கு அமைய விசாரணைகள் ஆரம்பிக்க பட்டு தேயிலை தொழிற்சாலையில் பொருத்த பட்டு இருந்த சீ.சீ.டிவி கேமராக்கள் பரிசோதனை மேற்கொள்ளபட்ட வேலை 23.07.2025 அன்று இரவு 8.30.மணி தொடக்கம் 10.30 மணிக்குள் 20 பேக் தேயிலை தூள் உதவி அதிகாரியினால் தோட்டத்திற்கு பெதிகள் கொண்டு செல்லும் பார ஊர்தி க்கு ஏற்றப் பட்டது தெரிய வந்தது.
அதனைத் தொடர்ந்து தோட்ட உதவி முகாமையாளர் மஸ்கெலியா பொலிஸ் சார் கைது செய்து ஹட்டன் நீதிமன்றில் ஆஜர் படுத்தினர். ஹட்டன் நீதி மன்ற நீதிவான் 30.07.2025 வரை விளக்கமறியலில் வைக்குமாறு பணித்துள்ளார் என மஸ்கெலியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி புஷ்பகுமார தெரிவித்தார்.
லங்கா4 (Lanka4)
அனுசரணை