Connect with us

பொழுதுபோக்கு

ஃபைட் எல்லாம் வேணாம் சார், இது உங்க படமா இருக்கட்டும்; இயக்குனரிடம் கேப்டன் வைத்த கோரிக்கை: எந்த படம் தெரியுமா?

Published

on

Vijayakanth Mkj

Loading

ஃபைட் எல்லாம் வேணாம் சார், இது உங்க படமா இருக்கட்டும்; இயக்குனரிடம் கேப்டன் வைத்த கோரிக்கை: எந்த படம் தெரியுமா?

தமிழ் சினிமாவில் பல ஃபீல் குட் படங்களை இயக்கி வெற்றி கண்டவர் இயக்குனர் விக்ரமன். புது வசந்தம் படம் தொடங்கி, பிரியமான தோழி, சூரியவம்சம், வானத்தைப்போல, பூவே உனக்காக என பல வெற்றிப்படங்களை கொடுத்த இவர், விஜயகாந்த் நடிப்பில் வெளியான வானத்தைப்போல படத்தில் நடந்த சம்பவம் குறித்து பேசியுள்ளார்.1990-ம் ஆண்டு வெளியான புது வசந்தம் என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான இவர் முதல் படத்திலேயே 2 தமிழக அரசின் சிறந்த இயக்குனர் மற்றும் சிறந்த படத்திற்கான விருதை பெற்றிருந்தார். அதனைத் தொடர்ந்து, பெரும்புள்ளி கோகுலம், நான் பேச நினைப்பதெல்லாம், பூவே உனக்காக, சூர்ய வம்சம், உன்னை நினைத்து, வனத்தைப்போல உள்ளிட்ட பல வெற்றிப்படங்களை கொடுத்தார்.பூவே உனக்காக படம் விஜய்க்கும், சூர்யவம்சம் படம் சரத்குமாருக்கும், சூர்யாவுக்கு உன்னை நினைத்து, என அவர்களின் திரை வாழ்வில் முக்கிய படங்களாக அமைந்த்து. அந்த வகையில், விஜயகாந்த் 2 வேடங்களில் நடித்து வெளியான வானத்தைப்போல திரைப்படம், பெரிய வெற்றியை கொடுத்த படம்.  அதேபோல் மாதவனுக்கு ப்ரியமான தோழி என பெரிய வெற்றியை தேடி கொடுத்தவர் இயக்குனர் விக்ரமன். இவர் கடைசியாக கடந்த 2014-ம் ஆண்டு நினைத்தது யாரோ என்ற படத்தை இயக்கி இருந்தார்.அதன்பிறகு படங்கள் இயக்குவதை நிறுத்திவிட்ட விக்ரமன் திடீரென சினிமாவை விட்டு விலகிய நிலையில், சமீப காலமாக யூடியூப் சேனல்களுக்கு பேட்டி அளித்து வருகிறார், அந்த வகையில் சினிமாவில், வானத்தைப்போல படத்தில் நடித்த விஜயகாந்த், படப்பிடிப்பு நடந்த இறுதிக்கட்டத்தில் படத்தில் சண்டைக்காட்சியே இல்லை என்றால் அவரது ரசிகர்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்று நினைத்து இறுதியில் ஒரு சண்டைக்காட்சி வைக்க முடிவெடுத்துள்ளார்.இயக்குனரின் முடிவை பற்றி தெரிந்துகொண்ட விஜயகாந்த், சார் இந்த படம் ரொம்ப நல்லாருக்கு, எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு, நீங்க சீன் எடுக்கும் விதமும் எனக்கு பிடிச்சிருக்கு. இதில் ஃபைட் சீன் வேண்டாம் சார். இது விஜயகாந்த் படமாக இருக்க வேண்டாம். விக்ரமன் படமாகவே இருக்கட்டும். நீங்க எப்படி எடுக்க நினைத்தீர்களோ அப்படியே எடுங்க. எனக்காக எதையும் மாற்றிக்கொள்ள வேண்டாம் என்று கூறியுள்ளார். இதை கேட்ட விக்ரமன், ரசிகர்கள் உங்களை மாஸ், ஆக்ஷன் ஹீரோவாக பார்த்துவிட்டார்கள். அவர்கள் ஏமாற கூடாது. அதற்காகவாது ஒரு ஃபைட் வேண்டும் என்று கூறியுள்ளார்.அதன்பிறகு தான் வானத்தைப்போல திரைப்படத்தில் க்ளைமேக்ஸ் சண்டைக்காட்சி படமாக்கப்பட்டுள்ளது. இது அவரின் ரசிகர்களை திருப்திப்படுத்துவதற்காக வைக்கப்பட்டது. விஜயகாந்த் சார் வேண்டாம். எனக்கு ஒரு வித்தியாசமான படமாக இருக்கட்டும் என்று சொல்லியும், நான் வைத்தேன். அவர் ஒரு பக்கா ஜென்டில்மேன். எதிலும், தலையீடு குறுக்கீடு எதுவும் கிடையாது. அதேபோல் மண் எண்ணி எடுக்கும் சீன், சூரியவம்சம் படத்திற்காக எழுதப்பட்டது.சூரியவம்சம் படத்தின் நீளம் கருதி அந்த காட்சியை படமாக்கவில்லை. அதனால் இந்த படத்தில் அதை வைத்தோம் என்று இயக்குனர் விக்ரமன் ஒரு பேட்டியில் கூறியுள்ளார். 

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன