இலங்கை
அனுமதியற்ற கட்டுமானம்; ஆண்டுதோறும் அபராதம்

அனுமதியற்ற கட்டுமானம்; ஆண்டுதோறும் அபராதம்
கடற்கரையோரத்தில் கட்டப்பட்ட அங்கீகரிக்கப்படாத கட்டு மானங்களுக்கு ஆண்டுதோறும் அபராதம் விதிக்க கரையோரப் பாதுகாப்பு மற்றும் கரையோர வள முகாமைத்துவத் திணைக்களம் திட்டமிட்டுள்ளது.
பாதுகாக்கப்பட்ட கடற்கரை வலயத்துக்குள் உள்ள அங்கீகரிக்கப்படாத சில கட்டடங்களை அகற்றுவதன்மூலம் கடலோரப் பகுதிகளுக்கு பாதிப்பு ஏற்படும் என்பதால் அதனைப் பாதுகாப்பதை நோக்கமாகக்கொண்டு இந்தத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.