பொழுதுபோக்கு
அப்பா பிரபல நடிகர், மகன் பல் டாக்டர்; ஆனா வீட்டில் இருப்பது இ.எம்.ஐ பொருட்கள்: செந்தில் மகன் ஹோம் டூர் வைரல்!

அப்பா பிரபல நடிகர், மகன் பல் டாக்டர்; ஆனா வீட்டில் இருப்பது இ.எம்.ஐ பொருட்கள்: செந்தில் மகன் ஹோம் டூர் வைரல்!
காமெடி நடிகர் செந்திலின் மகன் மணிகண்டன் பிரபுவின் வீடு எப்படி இருக்கிறது என்று கலாட்டா பிங் யூடியூப் பக்கத்தில் கூறியிருப்பது பற்றி பார்ப்போம். தமிழ் சினிமாவின் வரலாற்றில் நகைச்சுவை என்றால் முதலில் நினைவுக்கு வருவது கவுண்டமணி – செந்தில் கூட்டணிதான். ஏறத்தாழ 100-க்கும் மேற்பட்ட படங்களில் இவர்கள் இருவரும் இணைந்து நடித்த காட்சிகள், இன்றும் ரசிகர்களால் கொண்டாடப்படுகின்றன.இதில் செந்தில் சுமார் 260-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். தான் சினிமாவில் இருந்தாலும் தன் மகனை பல் மருத்துவராக்கியுள்ளார். சினிமாவைவிட்டு விலகியும் தந்தையின் நிழலில் இருந்து விலகியும் தன் சொந்த முயற்சியில் வாழ்ந்து வருவதாக செந்தில் மகன் மணிகண்டன் தெரிவித்துள்ளார். இவரது வீட்டுக்குள் நுழைந்ததும் முதலில் செந்தில் மற்றும் மணிகண்டனின் புகைப்படம்தான் இருக்கும். ‘தடையுடை’ என்ற படத்தில் இருவரும் அப்பா, மகன் கதாபாத்திரத்தில் நடித்தபோது எடுக்கப்பட்ட ஒரு காட்சி அது என்று அவர் கூறினார். அந்தப் படத்தில் செந்தில் தந்தையாக, மகனுக்கு நடிப்பில் மட்டுமல்லாது, வாழ்க்கையிலும் பல இன்புட்ஸ்களைக் கொடுத்துள்ளார். அவர் ஒரு ஸ்ட்ரெஸ் பஸ்டர் என்றும், அவர் பேசும்போது நகைச்சுவையும், அர்த்தமும் இருக்கும் என்றும் மணிகண்டன் பெருமையுடன் கூறினார்.அதேபோல், உடல் எடையில் ஏற்பட்ட பெரும் மாற்றத்தைப் பற்றியும் பகிர்ந்து கொண்டார். ஒரு காலத்தில் 87 கிலோவாக இருந்த அவர், உடல்நலக் குறைபாடுகள் குறித்து மக்கள் கேட்டதால், உடற்பயிற்சி செய்து 12 கிலோ குறைத்துள்ளார். ஆனால், இந்த மாற்றத்தை செந்தில் சார், ‘வாயைக் கட்டுப்படுத்தடா’ என்று செல்லமாக கிண்டல் செய்வதாகவும் கூறுகிறார். இவரது வீட்டில் நிறைய பூனைகள் வளர்ப்பதால் பூனைகளுக்கு தனி அறை மாடியில் ஒதுக்கப்பட்டுள்ளது என்றார்.வீட்டில் விலை உயர்ந்த பொருட்கள் இல்லை என்றாலும், கார் கூட இ.எம்.ஐ.யில் தான் வாங்கப்பட்டுள்ளது. இது பலரது கனவாக இருக்கலாம். மேலும், வீட்டில் பூனைகளை அதிகம் வளர்ப்பதால், வீட்டு இன்டீரியரை மிக எளிமையாக அமைத்துள்ளதாகவும் கூறினார். பூனைகளுக்காகவே மொட்டைமாடியில் ஒரு அறையை ஒதுக்கியுள்ளனர். இந்த வீடு அவரது மாமனாரால் கொடுக்கப்பட்டாலும், புதுப்பித்தலுக்காகவே 8 லட்சம் ரூபாய் செலவு செய்துள்ளதாகவும் கூறியுள்ளார்.