சினிமா
அமெரிக்காவில் இந்தியாவுக்கு முன்பே ரிலீஸாகும் ரஜினியின் ‘கூலி’! மகிழ்ச்சியில் ரசிகர்கள்.!

அமெரிக்காவில் இந்தியாவுக்கு முன்பே ரிலீஸாகும் ரஜினியின் ‘கூலி’! மகிழ்ச்சியில் ரசிகர்கள்.!
தலைவர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் புதிய திரைப்படம் ‘கூலி’ (Coolie) குறித்து எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது.இன்று வெளியான அதிகாரபூர்வ அறிவிப்பின் படி, இந்த திரைப்படம் அமெரிக்காவில் இந்தியாவுக்கு முன்னதாக திரையிடப்பட இருக்கிறது என்பது ரசிகர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.படக்குழுவினரின் அறிவிப்பின்படி, அமெரிக்க நேரப்படி ஆகஸ்ட் 13ம் தேதி ‘கூலி’ திரைப்படம் பிரிமியர் காட்சியாக திரையிடப்பட உள்ளது. அதாவது, இந்தியா முழுவதும் படத்தை பார்க்கும் அதே நாளின் முந்தைய இரவு அமெரிக்காவில் ரசிகர்கள் ரஜினியின் மாஸான நடிப்பை பார்க்கவுள்ளனர்.இந்தியாவில் படத்தின் அதிகாரபூர்வ ரிலீஸ் தேதி ஆகஸ்ட் 14, 2025. இதனால் இந்திய ரசிகர்கள் விடுமுறை நாளில் ரஜினியின் புதிய கெட்டப்பை பார்த்து குதூகலிக்க தயாராகவுள்ளனர்.