வணிகம்
இந்த வங்கி வாடிக்கையாளர்களுக்கு ஜாக்பாட்…. ஹோம் லோன் வட்டி விகிதம் குறைப்பு!

இந்த வங்கி வாடிக்கையாளர்களுக்கு ஜாக்பாட்…. ஹோம் லோன் வட்டி விகிதம் குறைப்பு!
ரிசர்வ் வங்கி ரெப்போ வட்டி விகிதத்தை குறைத்ததை தொடர்ந்து, வீட்டுக் கடன்களுக்கான வட்டி விகிதங்கள் இப்போது 7.5% க்கும் குறைவாக கிடைக்கின்றன. ஜூன் 6 அன்று ரிசர்வ் வங்கி ரெப்போ வட்டி விகிதத்தை 50 அடிப்படை புள்ளிகள் குறைத்தது. இந்த ஆண்டு பிப்ரவரி மற்றும் ஏப்ரல் மாதங்களில் செய்யப்பட்ட குறைப்புகளையும் சேர்த்து, மொத்தமாக 100 அடிப்படை புள்ளிகள் குறைக்கப்பட்டுள்ளன. அந்த வகையில், பிரபலமான வங்கிகளில் வீட்டுக் கடன்களுக்கு வழங்கப்படும் வட்டி விகிதங்களை இந்த செய்திக் குறிப்பில் பார்க்கலாம்.கனரா வங்கி மற்றும் யூனியன் பேங்க் ஆஃப் இந்தியாவில் வட்டி விகிதம் 7.3%-ல் இருந்து தொடங்குகிறது. ரூ. 50 லட்சம் கடனை 20 ஆண்டுகளுக்குள் திருப்பி செலுத்த மாதத் தவணை ரூ. 39,670 ஆக இருக்கும். பேங்க் ஆஃப் பரோடாவில், வட்டி விகிதம் 7.45%-ல் இருந்து தொடங்குகிறது. ரூ. 50 லட்சம் கடனுக்கு, 20 வருடங்களுக்கான இ.எம்.ஐ ரூ. 40,127 ஆகும். ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா மற்றும் பஞ்சாப் நேஷனல் வங்கியில் வட்டி விகிதம் 7.5%-ல் இருந்து தொடங்குகிறது. ரூ. 50 லட்சம் கடனுக்கு, 20 வருடங்களுக்கான இ.எம்.ஐ ரூ. 40,280 ஆக இருக்கும்.ஹெச்.டி.எஃப்.சி வங்கியில், வீட்டுக் கடன்களுக்கான வட்டி விகிதம் 7.9%-ல் இருந்து தொடங்குகிறது. ரூ. 50 லட்சம் கடனுக்கு, 20 வருடங்களுக்கான இ.எம்.ஐ ரூ. 41,511 ஆகும். கோடக் மஹிந்திரா வங்கியில், வட்டி விகிதம் 7.99%-ல் இருந்து தொடங்குகிறது. ரூ. 50 லட்சம் கடனுக்கு, 20 வருடங்களுக்கான இ.எம்.ஐ ரூ. 41,791 ஆக இருக்கும். ஐ.சி.ஐ.சி.ஐ வங்கியில், வட்டி விகிதம் 8%-ல் இருந்து தொடங்குகிறது. ரூ. 50 லட்சம் கடனுக்கு, 20 வருடங்களுக்கான இ.எம்.ஐ ரூ. 41,822 ஆகும்.ஆக்சிஸ் வங்கியில் வீட்டுக் கடன்களுக்கான வட்டி விகிதம் 8.35%-ல் இருந்து தொடங்குகிறது. ரூ. 50 லட்சம் கடனுக்கு, 20 வருடங்களுக்கான இ.எம்.ஐ ரூ. 42,918 ஆகும். மேலும், யெஸ் வங்கியில் வட்டி விகிதம் 9%-ல் இருந்து தொடங்குகிறது. ரூ. 50 லட்சம் கடனுக்கு, 20 வருடங்களுக்கான இ.எம்.ஐ ரூ. 44,986 ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது.