Connect with us

இலங்கை

இனிய பாரதி புதைகுழி; தம்பிலுவில் இந்து மயானத்தில் தோண்டும் நடவடிக்கை; திரண்ட மக்கள்

Published

on

Loading

இனிய பாரதி புதைகுழி; தம்பிலுவில் இந்து மயானத்தில் தோண்டும் நடவடிக்கை; திரண்ட மக்கள்

 அம்பாறை   திருக்கோயில் பொலிஸ் பிரிவிலுள்ள தம்பிலுவில் இந்து மயானத்தில் தோண்டும் நடவடிக்கையை இன்று (31) சிஐடியினர் அக்கரைப்பற்று நீதவான் நீதிமன்ற நீதவான் முன்னிலையில் இடம்பெற்று வருகின்றது.

இனிய பாரதி தலைமையில் கடத்தப்பட்டு காணாமல் போன 18 வயது மாணவன் பார்த்திபன், முன்னாள் கிழக்கு பல்கலைக்கழக உபவேந்தர் சு.ரவீந்திரநாத், ஊடகவியலாளர் பிரதீப் எக்னெலிகொட ஆகியோர் படுகொலை செய்யப்பட்டு தம்பிலுவில் இந்து மயானத்தில் புதைக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது.

Advertisement

கருணா கட்சியைச் சேர்ந்த இனியபாரதி என அழைக்கப்படும் கிழக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினரும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஒருங்கிணைப்பாளருமான கே. புஷ்ப குமார் மற்றும் அவரது சகாவான சசீந்திரன் தவசீலன் ஆகியோரை 2007-6-28 ம் திகதி திருக்கோவில் பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் உதயகுமார் படுகொலை தொடர்பாக சந்தேகத்தின் அடிப்படையில் கடந்த 6ம் திகதி திருக்கோயில் மற்றும் மட்டு சந்திவெளி பகுதிகளில் வைத்து சிஐடியினர் கைது செய்தனர்.

இவர்களுடன் இனிய பாரதியின் சகாக்களான முன்னாள் சாரதி செந்தூரன், திருக்கோயில் விநாயகபுரத்தைச் சேர்ந்த தொப்பி மனாப் என்றழைக்கப்படும் விக்கினேஸ்வரன், வெலிகந்தை தீவுச்சேனையைச் சேர்ந்த பாலகிருஷ்ணன் சபாபதி மற்றும் மட்டக்களப்பைச் சேர்ந்த யூட் என அழைக்கப்படும் ரமேஷ் கண்ணா ஆகியோரை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர்.

இந்த விசாரணையின் அடிப்படையில் கடந்த 2009ம் ஆண்டு ஜூலையில் திருக்கோயில் விநாயக புரத்தைச் சேர்ந்த 18 வயதுடைய மாணவன் பார்த்திபன், 2006 டிசம்பர் 15 ம் திகதி கொழும்பில் இருந்து மட்டக்களப்பு நோக்கி வந்த கிழக்கு பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் பேராசிரியர் எஸ்.ரவீந்திரநாத், 2010- ஜனவரி 26ம் திகதி ஊடகவியலாளர் பிரதீப் எக்னெலிகொட ஆகியோர் கடத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்டதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

Advertisement

இதனையடுத்து சிஐடி யினர் கைது செய்யப்பட்டவர்களை குறித்த மயானத்துக்கு கடந்த இரு தினங்களாக அழைத்துச் சென்று புதைக்கப்பட்ட இடங்களை அடையாளப்படுத்தினர்.

இதற்கமைய குறித்த மயான இடத்தை தோண்டி சோதனை செய்வதற்கு அக்கரைப்பற்று நீதவான் நீதிமன்றத்தில் சி ஐ டி யினர் அனுமதி கோரியதை அடுத்து நீதவான் ஏ.எல்.எம்.றிஸ்வான் முன்னிலையில் ஏற்கனவே கைது செய்யப்பட்ட மட்டக்களப்பைச் சேர்ந்த யூட் என அழைக்கப்படும் ரமேஷ் கண்ணா அடையாளம் காண்பிக்கும் இடத்தை பைக்கோ இயந்திரம் கொண்டு பிற்பகல் 2.00 மணிக்கு தோண்டும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதன் போது அங்கு இதுவரை எந்தவிதமான உடற்பாகங்கள் மீட்கப்படவில்லை என கூறப்படுகின்றது.

Advertisement

இதேவேளை அந்த பகுதியில் மக்கள் திரண்டு நின்று அவதானித்த வண்ணம் இருந்தனர்.

Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன