பொழுதுபோக்கு
எனக்கு லவ்வே வரல, அவங்க தான் ப்ரபோஸ் பண்ணாங்க; காதல் திருமணம் பற்றி பேசிய பாடகர் க்ரிஷ்!

எனக்கு லவ்வே வரல, அவங்க தான் ப்ரபோஸ் பண்ணாங்க; காதல் திருமணம் பற்றி பேசிய பாடகர் க்ரிஷ்!
தமிழ் சினிமாவில் பாடகர் க்ரிஷ் மற்றும் சங்கீதா இருவரும் காதல் திருமணம் செய்துகொண்ட நிலையில், சங்கீதா தான் என்னை காதலித்தார். ஆனால் எனக்கு அவர் மீது காதல் வரவில்லை என்று பாடகர் க்ரிஷ் ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.தமிழ் சினிமாவில் பாடகர், இசையமைப்பாளர், பாடல் ஆசிரியர், நடிகர் என பன்முக திறமை கொண்டவர் க்ரிஷ். கடந்த 2004-ம் ஆண்டு பாலாஜி சக்திவேல் இயக்கத்தில் வெளியான காதல் படத்தில் பூவும் புடிக்கிது என்ற பாடல் மூலம் பாடகராக அறிமுகமானவர் தான் க்ரிஷ். தொடர்ந்து, ஹாரிஷ் ஜெயராஜ், தேவா, ஏ.ஆர்.ரஹ்மான், இமான், கார்த்திக் ராஜா, யுவன் சங்கர் ராஜா, விஜய் ஆண்டனி உள்ளிட்ட முன்னணி இசை அமைப்பாளர்களின் இசையில் பாடல்கள் பாடியுள்ளார்.கடைசியாக கடந்த 2019-ம் ஆண்டு கார்த்தி நடிப்பில் வெளியான தேவ் என்ற படத்தில் பாடல் பாடிய க்ரிஷ், சிங்கம் 3 உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார். அதேபோல் ராமன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும், படத்திற்கு இசையமைத்துள்ள அவர், கண்டேன் என்ற படத்தில் பாடலையும் எழுதியுள்ளார் சின்னத்திரையில், மகராசி சீரியலுக்கு இசையமைத்துள்ள க்ரிஷ் கடந்த 2009-ம் ஆண்டு நடிகை சங்கீதாவை திருமணம் செய்துகொண்டார். இவர்களின் திருமணம் திருவண்ணாமலையில் நடைபெற்றது.இவர்கள் இருவரும் காதல் திருமணம் செய்துகொண்ட நிலையில், சங்கீதாதான் என்னை காதலித்தார் என்று பாடகர் க்ரிஷ் கூறியுள்ளார். இது குறித்து அவர் சாய் வித் சித்ரா நிகழ்ச்சியில் கூறுகையில், சங்கீதா மீது எனக்கு லவ்லாம் வரல. சீரியஜா அவர் மீது லவ் வரல. அவார்டு ஃபங்க்ஷனில் தான் சந்தித்தோம். அவர் தான் எனக்கு அவார்டு கொடுத்தார். அதற்கு முன்புவரை சங்கீதாவை தெரியும். அவர் நடித்த பிதாமகன் படத்தை அமெரிக்காவில் பார்திருக்கிறேன்.அவார்ட் ஃபங்க்ஷன் முடிந்தவுடன் பார்ட்டியில் சந்தித்தோம். அவங்களுக்கு அருகில் இருக்கும் சேரில் என்னை உட்கார சொன்னார். அதன்பிறகு பேசிக்கொண்டிருந்தோம். அங்கு தொடங்கியது. அதன்பிறகு நான் சீக்கிரமாக போக வேண்டும் என்று சொல்லிவிட்டு கிளம்பினேன். என் போன் நம்பர் கேட்கத் துடிக்குது. அதுக்குள்ள நான் எஸ்கேப் ஆகிவிட்டேன். நடிகை லட்சுமி ராய் எனக்கு ப்ரண்டு. அவரிடம் உன் பர்த்டேவை நான் செலிபிரேட் பண்றேன். என் ப்ரண்ட்ஸ் நம்பர் எல்லாம் கொடு நானே இன்வைட் பண்றேன் என்று சொல்லி என் நம்பரை வாங்கி எனக்கு போன் செய்தார்.நான் சங்கீதா பேசுறேன் என்று சொன்னவுடன், எந்த சங்கீதா என்று கேட்டேன். அவார்டு கொடுத்தேன். சாரிங்க சொல்லுங்க என்று சொன்னபோது, இல்லை லக்ஷ்மியோட பர்த்டே நான் தான் அரஞ்ச் பண்ணுகிறேன். அவளுடைய ஃப்ரெண்ட்ஸ்லான் நான் தான் கால் பண்ணிட்டு இருக்கேன் என்று சொன்னார். நான் அப்படியா சரி நான் வந்துருவேன். என்று சொல்லிட்டு வைத்துவிட்டேன் அங்கே பேச ஆரம்பித்தோம்.அதன்பிறகு சங்கீதா, நான் உங்களை காதலிக்கிறேன். இதை அடுத்த ஸ்டெப்புக்கு கொண்டு போக வேண்டும் என்று ஆசைப்படுகிறேன். எனக்கு உங்களை மிகவும் பிடிச்சிருக்கிறது என்று எனக்கு ப்ரபோஸ் பண்ணியது அந்த பெண்ணுதான். ஒரு பொண்ணே இறங்கி வரும்போது நமக்கு என்ன வீராப்பு என்று சரி என்று சொல்லிவிட்டேன் என்று க்ரிஷ் கூறியுள்ளார்.