சினிமா
ஓவியா என்ன இப்டி மாறிட்டாங்க…. வைரலான வீடியோவால் இன்ஸ்டாவே பத்திக்கிச்சு..!

ஓவியா என்ன இப்டி மாறிட்டாங்க…. வைரலான வீடியோவால் இன்ஸ்டாவே பத்திக்கிச்சு..!
தமிழ் சினிமா ரசிகர்கள் மனதில் இன்று வரை தனி இடம் பிடித்து வைத்திருப்பவர் நடிகை ஓவியா. அவர், சில காலம் திரைப்படங்களில் நடிக்காமல் ஓய்வில் இருந்தாலும், அவருக்கு ரசிகர்களின் அன்பு குறையவில்லை. குறிப்பாக, பிக் பாஸ் சீசன் 1 மூலம் அவர் பெற்ற புகழ் இன்னும் அவரது நிழலாக ஒட்டிக்கொண்டு இருக்கிறது.இந்நிலையில், நடிகை ஓவியா தற்பொழுது தனது Instagram பக்கத்தில் ஒரு Reels வீடியோவை பகிர்ந்துள்ளார். இந்த வீடியோவில், அவர் வித்தியாசமான தோற்றத்தில், ஒரு பழைய தமிழ் பாடலுக்கு மென்மையான நடனம் ஆடியுள்ளார். இதில் ஓவியா போட்ட ஆடை, முக பாவனை மற்றும் மேக்-அப் அனைத்தும் சூப்பராக காணப்பட்டது.அதுவும் இந்த வீடியோவில் அவர் தமிழ் சினிமாவின் ஏராளமான ரசிகர்களுக்கு தெரிந்த பாடலான “இளமை எனும் பூங்காற்று…” என்ற ஹிட் பாடலுக்கு நடனமாடியுள்ளார். அவர் பகிர்ந்த இந்த Reels வீடியோ, ரசிகர்களின் மனதை முழுமையாக கவர்ந்துள்ளது.ஓவியாவின் இந்த வீடியோ வெளியான சில மணி நேரங்களுக்குள், ஆயிரக்கணக்கான லைக்குகள் மற்றும் கமெண்ட்ஸ் ஆகியவை குவிந்து வருகின்றன. ரசிகர்கள் இவரை மீண்டும் திரையில் பார்க்க விருப்பம் தெரிவித்ததுடன், “Queen is back” போன்ற பதிவுகளால் ஓவியாவை புகழ்ந்து தள்ளுறார்கள்.